சிரஞ்சீவியர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சிரஞ்சீவி +
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---चिरञ्जीवी---சி1ரஞ்சீவி--வேர்ச்சொல்
பொருள்
தொகு- சிரஞ்சீவியர், பெயர்ச்சொல்.
- நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வரம்பெற்றவர்களான அச்சுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபாசாரியன், பரசுராமன் என்ற எழுவர். (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- persons blessed with immortality, seven in number, viz., Accuvattāmaṉ, Makāpali, Viyācaṉ, Aṉumāṉ, Vipīṣaṇaṉ Kirupācāriyaṉ, Paracurāmaṉ
- இதையும் காண்க...சிரஞ்சீவி ..[[1]]
விளக்கம்
தொகு- சிரஞ்சீவி எனில் நீண்டநெடுங்காலம், சீவித்திருப்பவர் அதாவது நிலையாக என்றென்றும், சாகாவரம் பெற்றவர்களாக உயிர் வாழ்பவர் என்று பொருள்...இந்து புராணங்களின்படி ஏழுபேர் சாகாவரம் பெற்று, யுகங்கள் கடந்தும், இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்று நம்பப்படுகிறார்கள்...அவர்களே மேற்குறிப்பிடப்பட்ட எழுவராவர்..
-
இந்தோனேசிய ஓவியத்தில் அச்சுவத்தாமன்
-
மகாபலி சக்கரவர்த்தியும் வாமனனான திருமாலும்
-
போரில் மூர்ச்சையான இலக்குவன் மற்றும் வானர வீரர்களைக் காப்பாற்ற சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் அனுமான்
-
இலங்கை அரசனாக முடிசூடிக்கொண்ட விபீஷணன்
-
இந்தோனேசிய ஓவியத்தில் கிருபாசாரியன்
-
திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமன்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +