ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் கோவில்கொண்டுள்ள வைணவ இந்துக் கடவுளுக்கு சீனிவாசன் என்பது தமிழில் பெயர்...சீ எனில் (சமஸ்கிருதம்- ஸ்ரீ-श्री) திருமகள் எனப்படும் இலக்குமி...நிவாசம் என்றால் (சமஸ்கிருதம்- நிவாஸ- निवास) வாழுமிடம்/வசிக்குமிடம் என்பது பொருள்...திருமகள் இந்தப்பெருமாளின் திருமார்பில் வாசம் செய்துக் கொண்டிருப்பதால் இவர் சீனிவாசன் எனக் கொண்டாடப்படுகிறார்...உலகிலுள்ள கோடிக்கணக்கான இந்துக்களுக்கு இஷ்ட தெய்வமாக/குடும்பத் தெய்வமாக/குலத் தெய்வமாக இந்தப் பெருமாள் விளங்குகிறார்...கலியுகத் தெய்வம் என்று போற்றப்படும் இவர், இந்துத் தமிழர்களுக்கும், இந்துத் தெலுங்கர்களுக்கும் அதி முக்கியமான தெய்வம்...திருமால் எனப்படும் மகாவிட்டுணுவின் ஒரு தோற்றமான இவருக்கு திருவேங்கட நாதன், திருவேங்கடமுடையான், ஏழுமலையான், மலையப்பன், வெங்கடேசுவரன், சப்தகிரீசுவரன், வேங்கடரமணன்,பாலாஜி என பல வேறுத் திருநாமங்களுமுண்டு..-திருமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருச்சானூரில் சீனிவாசப் பெருமாளின் பத்தினி பத்மாவதி தாயார்/அலர்மேல் மங்கை கோவில் கொண்டுள்ளார்...இறைவன் சீனிவாசனைத் தரிசிக்கச் செல்பவர்கள் முதலில் பத்மாவதி தாயாரையும், பிறகு திருமலைக் குளக்கரைக் கோவிலுள்ள வராகப் பெருமாளையும் தரிசித்து அருள் பெற்றபிறகே, சீனிவாசனை தரிசிக்கவேண்டுமென்பது வரையறுக்கப்பட்ட விதி/சம்பிரதாயமாகும்...அப்போதுதான் திருமலைக்குச் சென்று இறைவன் சீனிவாசனைத் தரிசித்த முழுப்பலனும் கிடைக்குமாம்!