சுகபேதிச்சூரணம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சுகபேதிச்சூரணம், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a native herbal powder, primarily made of turpeth root (Operculina turpethum)
விளக்கம்
தொகு- சுக + பேதி + சூரணம் = சுகபேதிச்சூரணம்....இந்தச் சூரணம் பிராதனமாகச் சிவதைவேர் கொண்டுச் செய்யப்படுகிறது...சுகபேதிச்சூரணத்தால் பழைய மலம், உதரவர்த்த வாதம், பித்தவாத தொந்தம், பாலகிரகதோசம் ஆகியவை விலகும்.
- செய்யும் முறை: நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலம் ஆகிய 11 சரக்குகளிலிருந்து தனித்தனிச் சூரணங்கள் வகைக்கு ஒரு விராகனெடை வீதம் மொத்தம் 11 விராகனெடை, சுத்தி செய்த சிவதைவேர்ச் சூரணம் முப்பது விராகனெடை, ஆக மொத்தம் 41 விராகனெடை எடுத்துக்கொள்ளவேண்டும்...இதனுடன் சமனெடை (41 விராகனெடை) சீனி சர்க்கரை கூட்டிக்கலந்து புதுக் கலயத்திலாவது அல்லது காற்றுப் புகாதப் புட்டியிலாவது சேமித்துவைத்துக் கொள்ளவேண்டும்...இந்தச் சூரணத்தை வேளைக்கு 1 - 1 1/2 விராகனெடை வெந்நீரில் போட்டுக்கலக்கிச் சாப்பிட்டால் நான்கு ஐந்து முறை பேதியாகும்...இதன் மூலம் மேற்கூறப்பட்ட பிணிகளெல்லாம் போய்விடும்...ஒரு முறை உட்கொண்ட சூரணத்தின் அளவில் சரிவரப் பேதி ஆகாவிட்டால், மறுமுறை அளவை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
- இந்த சூரணத்தை உட்கொண்ட அன்றைய இரவு மருந்தின் வேகம் தணியும் பொருட்டு, சுக்கு, சீரகம் வகைக்கு ஒரு கழஞ்சு..(ஒரு கழஞ்சு 5.4 கிராம்).. ஆகத்தட்டி ஒரு மட்பாண்டத்தில் போட்டு கால்படி தண்ணீர்விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிப் போதிய அளவு பனங்கற்கண்டு போட்டு உட்கொள்ளவும்.