பொருள்

செயிர் {{பெ}

  1. கோபம்
    • செயிர்தீர் செங்கட்செல்வ (பரிபா. 4,10)
  2. குற்றம், மாசு
    • செயிர்தீரண்ணல் (பரிபா. 1, 27).
  3. போர்
    • செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி (பு. வெ. 7, 4).
  4. வருத்துகை
    • செயிர்த்தொழின்முதியோன் (சிலப். 27, 7).
  5. நோய்
    • செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கையவர் (குறள்,330).

(வி)

  1. சின, கோபி. வெகுளு
    • செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்(புறநா. 226).
  2. வருத்து, துன்புறுத்து
    • சிரறியவன்போற் செயிர்த்த நோக்கமொடு(பொருந. 124)
  3. குற்றம் செய்தல்
    • செயிர்த்தெழு தெவ்வர் (பொருந.120).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. anger, rage, fury
  2. fault, defect, blemish
  3. battle, fight
  4. afflicting, oppressing
  5. disease

(வி)

  1. be angry with, show signs of anger
  2. afflict, cause pain
  3. commit an offence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்சமூலம் 35)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செயிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செயிர்&oldid=1081548" இலிருந்து மீள்விக்கப்பட்டது