செவ்வியல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செவ்வியல் (பெ)
- செவ்விலக்கியங்களின் சிறப்பியல்புகள் செவ்வியல் எனப்படுகின்றன. அவை, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கி செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், வாழ்க்கையை எப்போதும் சமநிலையுடன் மிகைப்படுத்தாமல் நோக்கும் அணுகுமுறை, வாழ்க்கையின் எல்லா கூறுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் நடுநிலை, பிற்காலத்தில் உருவாகும் எல்லாவகை அழகியல் வடிவங்களுக்கும் முன்னுதாரணங்களை தன்னுள் கொண்டிருத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
செவ்வியல் என்பது நான்கு தளங்களில் பொருள்கொள்ளப்படும் சொல்.
- ஒரு மரபின் அடித்தளமாக அமையும் ஆக்கங்கள் செவ்வியல் எனப்படுகின்றன. உதாரணமாக சங்க இலக்கியம் தமிழின் செவ்வியல்.
- இரண்டாவதாக ஒரு மரபின் ஆகச்சிறந்த ஆக்கங்கள் செவ்வியல் எனப்படுகின்றன. உதாரணமாக கம்பராமாயணம் தமிழின் செவ்வியல்.இரண்டும் வேறு வேறு அழகியல் கொண்டவை. ஒன்றை ஏற்பவர் இன்னொன்றை நிராகரிக்கக்கூடும்
- மூன்றாவதாக ,ஒரு குறிப்பிட்ட வகைமாதிரியின் சிறந்த வடிவம் அதன் செவ்வியல் எனப்படுகிறது. பரணிகளில் கலீங்கத்துப்பரணியும் பிள்ளைத்தமிழ்களில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் செவ்வியல் எனப்படுகின்றன
- நான்காவதாக செவ்வியல் பண்புகளென சொல்லப்படும் சில இயல்புகள் – அதாவது சமநிலை, நிதானம், முழுமை போன்றவை- கொண்ட ஆக்கங்களை செவ்வியல் என்கிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் இலக்கணமே வேறு. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து ஒரு செவ்வியல் ஆக்கம். அதை கம்பனுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது(ஷாஜி,சேதுபதி,ஷர்மா…, ஜெயமோகன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செவ்வியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:செம்மொழி - மரபு - அழகியல் - செவ்விலக்கியம் - #