ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திகைப்பு (பெ)

  1. உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்பட முடியாத நிலை; வியப்பு; பிரமிப்பு
  2. மலைப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. amazement, disbelief, sense of awe
  2. perplexity, bewilderment
விளக்கம்
பயன்பாடு
  • மருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். (ராணி மங்கம்மாள், தீபம் நா. பார்த்தசாரதி)
  • கல்யாணிக்கு எதிர்பாராமல் அவனைச் சந்தித்ததனால் ஏற்பட்ட திகைப்பு ஒரு புறம், ஏதாவது தான் தவறாகச் சொல்லி அல்லது செய்து அதனால் மறுபடியும் முத்தையன் போய்விடப் போகிறானோ என்ற பயம் இன்னொருபுறம். (கள்வனின் காதலி, கல்கி)
  • எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் அவளைக் கண்டதனால் பூங்குழலிக்குச் சிறிது திகைப்பு உண்டாயிற்று. (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திகைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பிரமிப்பு - வியப்பு - மலைப்பு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=திகைப்பு&oldid=1968191" இலிருந்து மீள்விக்கப்பட்டது