திரள்
ஒலிப்பு
|
---|
பொருள்
- (பெ)- திரள்
==மொழிபெயர்ப்புகள்==*ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திரள் திரளாக மக்கள் குவிந்தனர் (multitudes and multitudes of people)
- விண்மீன் திரள் (a cluster of stars)
(இலக்கியப் பயன்பாடு)
- பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் ( பெரியபுராணம்)
- பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும் (கம்பரா., திரு அவதாரப் படலம்)
- பாரதியார் பாடல்கள் :
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
மிக்க திரளாய் - சுரர்,
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர் - சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
- கம்ப ராமயணம் பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும்
- பதினோராம் திருமுறை: பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
- கந்த புராணம் : வெண் கதிர் போல், திரள வல்லினை அனைய பூண் முலை உடைத் தெய்வத்
- பெரியபுராணம்: இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண் இலாத
- தேம்பாவணி: முடுகியன சாப மழைத் திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க,
- தேவாரம்: கலையானை பரசு தர பாணியானை கன வயிரத்திரளானை மணி மாணிக்க
- திருப்புகழ்: பவளத் தரளத் திரளக் குவைவெற்
- திருவாசகம்: செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த
- வில்லிபாரதம்: தேவினும், தேவ யோனியில் பிறந்த திரளினும், சிறந்த யாவர்க்கும்,
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +