நரமாமிசபட்சணி

தமிழ்

தொகு
 
நரமாமிசபட்சணி:
உருவகப்படுத்தப்பட்ட படம்--நரமாமிசபட்சணிகளுக்கு இரையான மனிதர்களும், அவர்களை சமைப்பவர்களும் ஒரு நரமாமிசபட்சணிகளின் விருந்து
 
நரமாமிசபட்சணி:
சுட்டுவீழ்த்தப்பட்ட ஒரு நரமாமிசபட்சணியான புலி
 
நரமாமிசபட்சணி:
சுட்டுவீழ்த்தப்பட்ட ஒரு நரமாமிசபட்சணியான சிங்கம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நர + மாமிச + பட்சணி
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---नर + मांस + भक्षणिन् ---நர + மாம்ஸ + ப4க்ஷணிந்--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • நரமாமிசபட்சணி, பெயர்ச்சொல்.
  1. மனிதவூன் தின்போன்
  2. மக்களிறைச்சி தின்னும் விலங்கு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. anthropophagist, cannibal
  2. man-eater, a man-eating animal, as tiger, shark

விளக்கம்

தொகு
  • நாகரீகம் பரவாத ஆஃப்ரிகா, பிஜி, இந்தியாவின் நாகாலாந்து போன்ற இன்னும் பல உலகப்பகுதிகளில், குறிப்பாக மலைப் பிரதேசங்களில் வாழ்ந்த பூர்வீக மலைச்சாதியினர், தங்களைப்போல் உடற்தோற்றம் இல்லாத பிற இன சமவெளி மனிதர்களையும், பிற மலைச்சாதியினரையும் தங்கள் எதிரிகளாகவே நினைத்து, வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம், அவர்களைக் கொன்று, அவர்களுடைய இறைச்சியை சாப்பிடும் வழக்கமுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்...
  • வயது முதிர்வினாலும், நோயால் பாதிக்கப்பட்டும், முக்கிய உடலுறுப்புகளை இழந்தும் சுதந்திரமாக வேட்டையாடித் தங்கள் உணவின் தேவையை அடையமுடியாத புலி, சிங்கம், ஓநாய் போன்ற இயற்கையாகவே மாமிசபட்சணிகளான விலங்குகளும், அவைகளுக்கு பிடித்துத் தின்ன இலகுவான மனிதனைக் கொன்றுத் தின்று நரமாமிசபட்சணிகளாகின்றன...கடல்வாழ் உயிரினங்களில் சுறாமீன் ஒரு நரமாமிசபட்சணியாகும்.. சில நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் இப்படி விலங்குகள் நரமாமிசபட்சணியாவதற்குக் காரணமாகின்றன..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரமாமிசபட்சணி&oldid=1400357" இலிருந்து மீள்விக்கப்பட்டது