நாவல்

(நாவல் பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நாவல் (பெ)

பொருள்
  1. (இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும்வளரும்) ஒரு மரம்; இம்மரத்தில் தோன்றும் கருநீல அல்லது கருஞ்செந்நீல நிறமுடைய பழம். உயிரினப் பெயர் (இலத்தீன் அடிப்படையில்) சைசிகியம் குமினி ( Syzygium cumini)
  2. புதுமை
  3. நவீனம்
  4. புதினம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- jamun plum
  • தெலுங்கு -జామ పండు (தமிழ் ஒலிப்பு:ஜாம ப1ன்டு3
விளக்கம்

மருத்துவ குணங்கள்

இனிப்புள்ள நாவற்பழங்களை உண்ண இரைப்பைக்குப் பலம் கொடுக்கும்...இதயத்தில் உண்டானச் சூட்டைக் குறைக்கும்...மலத்தையும் நீரையும் கட்டும்... புளிப்புச்சுவையுள்ள பழங்களை உண்டால் முன் சொல்லப்பட்ட குணங்கள் இருப்பினும் தொண்டையைக்கட்டும்... சிறிது உப்பிட்டுத் தின்றால் தொண்டைக்கட்டுக்கு பரிகாரமாகும்... கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது... சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு சீதள சம்பந்தமான நோய்கள் வரும்...இதன் சாற்றில் இருபங்கு சர்க்கரை கூட்டி சர்பத்து காய்ச்சி அதை வேளைக்கு 1-1 1/2 தோலாவீதம் சுத்தமான நீரில் கலந்துப் பருகிவந்தால் பெரும்பாடு,அதிகமாக சிறுநீர் போதல்,உட்சூடு அகியவை போகும்...இதன் கொட்டையை ஆடுதின்னாப் பாளை சாறுடன் நன்றாக மைய அரைத்துப் பட்டாணி அளவுக்கு மாத்திரை செய்து உலர்த்திக் காலை மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டுவர நீரிழிவு நோய் பறந்துவிடும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாவல்&oldid=1900401" இலிருந்து மீள்விக்கப்பட்டது