பச்சிலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பச்சிலை(பெ)
- பசுமையான இலை; பச்சையிலை
- பச்சிலைகளால்ஆகிய மருந்து; மூலிகை மருந்து
- மர வகை
- பன்றி வாகை
- ஒருவகைப் புகைச் சரக்கு
- ஒருவகைத் துகில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- green leaf; fresh leaf
- medicament consisting of leaves; herbal medicine
- Mysore gamboge, garcinia xanthochymus
- tube-in-tube wood
- a fumigating substance
- A kind of ancient garment
விளக்கம்
பயன்பாடு
- பச்சிலை வைத்தியம்
- அவனது அப்பாவைப் பாம்பு கொத்தியது கண்ணில். எவ்வளவு நாட்டுவைத்தியம் செய்தும் குணமாகவில்லை. பச்சிலை தேடி எத்தனை ஊருக்கு அலைந்திருப்பான் அந்தச் சிறுவயதில். கடைசியில் எதுவும் உதவவில்லை ( தாய்மை, ரிஷான் ஷெரீப்)
- பச்சிலை வாசனை, காட்டுப் பூக்களின் விநோதமான நறுமணம், மரங்களின் குளிர், எந்த விலங்கு எந்த நேரத்தில் நம்மைக் கடந்து போகுமோ என்கிற திகில் ( புதிய மனிதா... காட்டுக்கு வா!, விகடன்)
- பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடிப்போகும்! (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை (திருமூலர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பச்சிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +