வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், சிவசுப்பிரமணியன்!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--தகவலுழவன் (பேச்சு) 09:51, 31 ஆகத்து 2014 (UTC)Reply

நன்றி தகவலுழவன் அவர்களே

தொகு

வரலாற்று சான்று கொண்ட தொன்மை செம்மொழி - என் தாய் மொழி - தமிழ் மொழி மீது கொண்டுள்ள ஆர்வம் தான் என்னை விக்சனரி போன்ற வலை தளங்களுக்கு கொண்டு சேர்க்கும். தினசரி வாழ்க்கையில் மொழிக்கலப்படம் அதிகரிப்பதாக தோன்றிய போது இணையத்தில் சங்க இலக்கியம், தமிழ் இலக்கணம் பற்றி நேரம் கிடைக்கும் போது நான் தேடுவதுண்டு. அப்பொழுது தான் தமிழ் மொழி விக்சனரி பட்டியலில் 18ம் இடத்தில் இருப்பதை பார்த்தேன். பழம்பெரும் தமிழ் மொழியை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல என்னால் முடிந்த பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்று எண்ணினேன். உடனே பயனராக இன்று பதிவு செய்தேன்.

--சிவசுப்பிரமணியன் (பேச்சு) 13:44, 31 ஆகத்து 2014 (UTC)Reply

  1.   விருப்பம் தங்கள் ஆர்வத்திற்கு நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:04, 31 ஆகத்து 2014 (UTC)Reply
  2. நானும் உங்களைப் போன்ற சிந்தனைகளுடனே, இங்கு 4ஆண்டுகளாக உள்ளேன். ஆனால், இவ்வருடமே நிரலாக்கப்பணிகளில் கவனம் செலுத்துகிறேன்.கர்சன், நீங்கள்,இன்னும்சிலர் நமது இலக்கை அடைய உறுதுணையாக இருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். வாரம் 30நிமிடங்கள் ஒதுக்கக் கோருகிறேன். மற்றவை பிறகு,..--தகவலுழவன் (பேச்சு) 16:17, 31 ஆகத்து 2014 (UTC)Reply

உரையாடல்

தொகு

உங்களுடன் பேச எண்ணுகிறேன். உங்களுக்கும் அத்தகைய எண்ணம் இருப்பின், பேசுவதற்குரிய நாள் நேரம் குறித்து, எனது எண்ணுக்கு 90 95 34 33 42குறுஞ்செய்தி அனுப்பவும். அனுப்பவும். தொடர்பு கொள்கிறேன். ஆவலுடன்.. வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 17:43, 18 அக்டோபர் 2014 (UTC)Reply