வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Drsrisenthil/1!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

வருக, மரு. செந்தில்!--செல்வா 18:26, 12 ஜூலை 2010 (UTC)

நொதி என்னும் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் இட்டிருந்த கருத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அங்கு நான் இட்ட மறுமொழியை இங்கும் பதிவிடுகிறேன்.


கண்டிப்பாக, அறிவியலைப் பூரணமாகத் தமிழிற்கு மாற்ற வேண்டும்.--Drsrisenthil 17:53, 15 ஜூலை 2010 (UTC)

உங்களைப் போல இன்னும் சிலர் வந்தாலும் நாம் அசத்திவிட முடியும். 1,000 பக்கம் உள்ள அறிவியல் புத்தகத்தை ஒவ்வொருவரும் நாளுக்கு 2 பக்கம் என்னும் வீதத்தில் மொழி பெயர்த்தாலும், 25 ஏ நாட்களில் 20 பேர் தமிழில் ஆக்கிவிடலாம். 70 மில்லியன் மக்களில் ஒரு 100-200 பேர் கிட்டுவது அரிதல்ல, விடாது முயலுவோம். உங்கள் ஆர்வமும், ஊக்கமும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.--செல்வா 19:49, 15 ஜூலை 2010 (UTC)

உங்களது மறுமொழியில் உள்ளம் உவகை அடைந்தேன். ஓரே நோக்கில் நாம் இருப்பது புரிகிறது. நான் இதற்கெனவே ஒரு இணையத்தை சமீபத்தில் உருவாக்கி உள்ளேன். அதன் பெயர் பல்கலைக்கழகம் என்பதாகும். நாளாந்த மருத்துவச் செய்திகளை என்னால் இயன்றளவில் தமிழில் வழங்குவதென்று முடிவெடுத்து உள்ளேன். விக்கிபீடியா பதிவு நுட்பத்திற்கு நான் புதிது, எனவே, சிறிது பயிற்சி எடுக்கின்றேன், பின்னர் எனது மொழிபெயர்ப்புக்கள் பதிவிலிடுகின்றேன். ஏற்கனவேயுள்ள சில மருத்துவப் பதிவுகள் திருத்தி அமைக்கப்படவேண்டும். மேலும் மருத்துவத்தில் பல கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும். --Drsrisenthil 20:15, 15 ஜூலை 2010 (UTC)

உங்கள் முயற்சி மிகவும் பாராட்டக்கூடியது. உங்களுடைய இன்சுலின் கட்டுரையில் வௌம் Resveretrol பற்றி தமிழ் விக்கிப்பீடியவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் பார்க்கவும்: இரெசுவரட்ரால். அதனைத் திருத்தியோ மேன்மைப்படுத்தியோ உதவுங்கள் (இயலும் பொழுது). இன்னும் செப்பம் படுத்தி வளர்க்க வேண்டும் என எண்ணினேன். நிறைய தகவல்களும் நூல்களில் இருந்து திரட்டி வைத்துள்ளேன் (CBS தொடரில் அறுபது மணித்துளிகள் (60 Minutes) என்னும் நிகழ்வில் இந்த இசுவெரட்ரால் பற்றி கேள்விப்பட்டேன், அதன் பின் இக்கட்டுரையை எழுதினேன், இப்பொழுதுள்ள தமிழ் விக்கி கட்டுரை, ஆங்கில விக்கியில் உள்ளதைத் தழுவிதான். ஆனால் என்னிடம் இன்னும் கூடுதலான தகவல்களும் நூல்களும் உள்ளன. உங்கள் இன்சுலின் கட்டுரையில் கூட தமிழ் விக்கியில் உள்ள தகவலுக்கு தொடுப்பு கொடுக்கலாம்.--செல்வா 19:48, 16 ஜூலை 2010 (UTC)

நீங்கள் குறிப்பிட்டது வைனைப்பற்றி (செங்கள் பற்றி) நான் எழுதிய கட்டுரை என்று நினைக்கிறேன். மேலும் நிச்சயமாக மேன்மைப்படுத்த உதவி செய்கின்றேன். ஒரு சந்தேகம், நான் எழுதும் கட்டுரையை எனது இணையத்திலும் வெளியிட்டு இங்கும் வெளியிட விக்கிப்பீடியாவின் விதிமுறை இடமளிக்குமா? --சி. செந்தி 22:08, 16 ஜூலை 2010 (UTC)

  • ஆமாம், வைன் குடித்தல் உடம்புக்கு நல்லதா? என்னும் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். (ஒருதடவை இன்சுலின், நீண்ட நாட்களுக்கு நீரிழிவு நோய்க்கு நிவாரணம். என்னும் உங்கள் கட்டுரையின் அடியில் "அடுத்து" என்று உள்ளதைச் சொடுக்கி அங்கு வந்ததால், அது தனிக்கட்டுரை என்பதை உணரவில்லை. இப்பொழுது விக்கிப்பீடியாவில் உள்ள இரெசுவரட்ரால் கட்டுரைக்குத் தொடுப்பு கொடுத்துள்ளதைப் பார்த்தேன். நன்றி
  • விக்கிப்பீடியாவில் இடுவது எல்லாமே கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் இடுபவை. உங்கள் கட்டுரையைக் கட்டாயம் நீங்கள் இடலாம், ஆனால் அப்படி இடும்பொழுது நீங்கள் அதனை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் இடுவதாக ஒப்புக்கொள்கின்றீர்கள் என்பது பொருள் (ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் இவ் உரிமத்துக்கான குறிப்பு இருக்கும்). கிரியேட்டிவ் காமன்சு பற்றி அறிய Creative Commons என்னும் பக்கத்தையும் என்னும் இப்பக்கத்தையும் பார்க்கவும். விக்கிப்பீடியாவில் உள்ளதை யாரும் அதன் பகிர்வுரிமப்படி சுட்டு தந்துவிட்டுப் பயன்படுத்தலாம் (காப்புரிமத்துக்கான பணம் எதுவும் தர வேண்டியதில்லை, நூலாக அச்சடித்து விற்றாலும் கூட.). உங்களுடைய காப்புரிமம் உங்களுக்கே வேண்டும் எனில் அதனை விக்கிப்பீடியாவில் இட வேண்டாம். கிரியேட்டிவ் காமன்சு வழி பகிர்வுரிமம் நீங்கள் வழங்குவதாக (தருவதாக) இருந்தால் மட்டுமே விக்கியில் இடுங்கள். அதே போல காப்புரிமம் உடைய பிறருடைய எழுத்துகளை விக்கியில் இடுதலும் கூடாது.

--செல்வா 01:06, 17 ஜூலை 2010 (UTC)

உங்கள் பதிலுக்கு நன்றி செல்வா அண்ணா, நீங்கள் கூறியவற்றை இன்று படித்துப் பார்க்கின்றேன்.--சி. செந்தி 03:20, 17 ஜூலை 2010 (UTC)

விக்கி படங்கள் குறித்து தொகு

tumor marker‎‎, rubor, testicular tumor‎ என்பதில் விக்கிப்படங்களை இட்டுள்ளேன். ஒரு படமிடும் போது, ஏறத்தாழ 100பைட்டுகள்(bytes) அதிகமாகும். ஒரு சொல் 500பைட்டுகளுக்கு மேலிருந்தால், அதனைத் தலைமை விக்கி நிரல் சிறப்பாகக் குறிக்கிறது. --த*உழவன் 05:21, 17 ஜூலை 2010 (UTC)

எந்தப் பக்கத்திலும் ((சொல்லுக்கான பக்கமாயினும், பேச்சுப்பக்கமாயினும் சமுதாய வலைவாசல் பக்கங்களாயினும்,
[[படிமம்:Differ-between-eye-errors.png|thumb|right|250px|மூப்புப் பார்வையும் பிற கண்பார்வை குறைபாடுகளும்]]
என்பது போல இட்டீர்கள் என்றால் படிமம் அங்கு ஏறிவிடும். படத்தில் அளவைக் கட்டுப்படுத்த (பெரிதாக்கவோ, சிறிதாகக்வோ) 250px என்பது போன்று பிக்ஃசல் அளவைச் சுட்டலாம். இடப்புறம், வலப்புறம், நடுவே என்பதனையும் குறிக்கலாம், பட விளக்கத்தையும் சேர்க்கலாம். --செல்வா 16:07, 20 ஜூலை 2010 (UTC)
நன்றி இப்பொழுது புரிந்துவிட்டது.--சி. செந்தி 19:46, 20 ஜூலை 2010 (UTC)

தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் இருந்து விக்சனரிக்கு - ஒரு ஆய்வு தொகு

தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் இருந்து விக்சனரிக்குப் பதியப்பட்ட சொற்கள் சிலவற்றை மீளப் பார்வை செய்தல் தேவை என்பது எனது கருத்து. உதாரணமாக fructose

  • கால்நடையியல். பழவகைச் சர்க்கரை
  • தாவரவியல். பழவெல்லம்; பிரற்றோசு
  • மருத்துவம். ஃபுருக்ட்டோசு; பழச்சருக்கர; பிரற்றோசு
  • விலங்கியல். பழச் சர்க்கரை; பழவெல்லம்; புருற்றேசு
  • வேதியியல். ஃப்ரூக்டோசு; பிரற்றோசு
  • வேளாண்மை. பிறற்றோசு

glucose

  • பழச் சக்கரை; மாச் சக்கரை
  • இயற்பியல். பழவெல்லம்
  • கால்நடையியல். இரத்தச் சர்க்கரை; க்ளூக்கோஸ் சர்க்கரை
  • தாவரவியல். குளூக்கோசு; திராட்சை வெல்லம்
  • மனையியல். குளுககோஸ்
  • மருத்துவம். குளூக்கோசு; பழச்சருக்கர ஆக்கம்
  • விலங்கியல். குளுக்கோசு; திராட்சைவெல்லம்; மாவுச் சர்க்கரை
  • வேதியியல். குளுக்கோஸ்; குளூக்கோசு

௧) இங்கு பார்த்தால் வெவ்வேறு துறைகளில் ஓரே அர்த்தம் தரும் "பழவெல்லம்" என்பது வெவ்வேறு விதமாக, அதே நேரத்தில் ஆங்கில நேரடி முறை மூலமும் (ஃப்ரூக்டோசு; பிரற்றோசு) அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே பலர் அந்தந்தத் துறைகளில் இவ்வாறு படித்திருக்கலாம், எனினும் இவ்வாறு பதிவதன் மூலம் வருங்காலத்திலும் தமிழில் "பழவெல்லம்" என்று அழைக்கப்படாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.
இவற்றைப் பார்த்து வேளாண்மை பயிலும் மாணவர் "பிறற்றோசு" என்றே அழைப்பார்.

௨) தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் காணப்படும் வேறொரு தவறு எனக் கருதவேண்டியது, இரு வேறுபட்ட ஆங்கிலச்சொற்களிற்கு (எ.கா. glucose, fructose ) ஓரே கருத்து (பழவெல்லம்) வழங்கப்படுதல்.

(ஏற்கனவே விவாதித்த சொல்: Presbyopia, colour blindness போன்ற சொற்களுக்கு வெள்ளெழுத்து என்னும் பதம்)

௩) தவறான சொற்பதம் வழங்கல்; அங்கு வழங்கப்பட்டிருக்கும் தவறான எழுத்துப்பிழை உள்ள சொற்கள் விக்சனரியில் பதியப்படல்

(தொடுப்பு: http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=hypermetropia/+hyperodia&OptSearch=&id=All)
hypermetropia/ hyperodia
   * உளவியல். தொலைபார்வைக் கோளாறு

hyperodia என்பது தவறுதலாக அச்சிடப்பட்டு (hyperopia என்பதே சரியானது) இருந்தாலும், அகரமுதலியில் ஏற்படும் இத்தகைய தவறுகள் பெறும் விளைவை ஏற்படுத்தக்கூடியன. --சி. செந்தி 11:29, 23 ஜூலை 2010 (UTC)

  • விளக்கமான ஆய்வு செய்துள்ளீர்கள் செந்தில். தவறுகள் இருந்தால் தாராளமாகத் திருத்தியமைக்கலாம்; புதிய சொல் உருவாக்கும் போதும் பெரியளவில் மாற்றங்களைச் செய்யும்போதும் மட்டும் பேச்சுப் பக்கத்தில் உரையாடி விட்டு ஒருமித்த கருத்தின்படி செய்யலாம். உங்கள் பங்களிப்புகளை மேலும் தொடருங்கள். --பரிதிமதி 12:18, 23 ஜூலை 2010 (UTC)
நன்றி பரிதிமதி அவர்களே, பேச்சு:hypermetropia/_hyperodia என்னும் பக்கத்தை இயலுமானால் பாருங்களேன்..--சி. செந்தி 13:10, 23 ஜூலை 2010 (UTC)

உங்கள் கண்டுபிடிப்புகள் மிகவும் அருமை மரு. செந்தி. உங்கள் கருத்தும் மிகவும் சரியானதே. அதாவது பலர் மீள்பார்வை செய்தல் மிகவும் தேவையான ஒன்று, குறிப்பாக துறையறிஞர்கள் பலர் செய்ய வேண்டும். பழவெல்லம் என்பதும் தவறு என்பது என் தனிக்கருத்து. பழவினியம் என்று வேண்டுமானால் சொல்லலாம். குளூக்கோசு, பிரக்டோசு (விரக்ட்டோசு) என்பதற்கு சரியான சொற்கள் இன்னும் உருவாகவில்லை என்றே நினைக்கிறேன். குளூக்கோசு என்பதை ஒற்றை இனியம் அல்லது மாவினியம் (மாவு ஒற்றையினியம்) எனலாம். விரக்டோசு (fructose அல்லது levulose) என்பதை பழ ஒற்றையினியம் அல்லது பழவினியம் எனலாம்.--செல்வா 22:49, 23 ஜூலை 2010 (UTC)

சொற்பிழை திருத்தத்துக்கு நன்றி தொகு

மரு.செந்தி, நாய் என்பதை நோய் எஇன்று திருத்தியமைக்கு மிக்க நன்றி. இப்படி எத்தனை உள்ளதோ என்று கவலையாக உள்ளது. அவ்வப்பொழூது தொடர்பான சொற்களைப் பார்வையிடும் பொழுது இப்படித் தென்படும் சொற்களைத் திருத்துவது ஒன்றே இப்பொழுதுள்ள வழி. பேராசிரியர் தெய்வசுந்தரம் போன்றவர்கள் சொல்திருத்திகள் ஆக்கியுள்ளார்கள். அவை கிடைக்கும்பொழுது தானியங்கியாய் திருத்தங்கள் செய்ய இயலும். விக்கிப்பீடியாவில் மாகிரும் xml வழி செய்ய வழிகோலுகின்றார்.--செல்வா 22:50, 23 ஜூலை 2010 (UTC)

கருத்து பகிர்வுகள் தொகு

  • நீங்கள் மருத்துவச் சொற்களை ஆய்வது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போல துறைசார்ந்த நிபுணரொருவர் ஆய்வது, தமிழ் விக்சனரி தொடங்கியதிலிருந்து, இதுவே முதல் முறை என்றே எண்ணுகிறேன்.தொடரட்டும் உங்கள் ஆய்வு. வாய்ப்பு வந்தால் த.இ.ப.வுக்கும் உங்கள் ஆய்வுகளை அனுப்பலாம். எனவே,
  1. அத்தகைய மாற்றங்களை அட்டவணைச்செயலியில்(spreadsheet) மாற்றம் செய்தவைகளையும், மாற்றம் செய்வதற்கு முன் இருந்தவைகளையும் குறித்து வைத்தால் பின்னால் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும்.
  2. படத்தினை எளிமையாக இப்படியும் இடலாம்.{{படம்|கோப்பின் பெயர்|விவரம்}} நானும் பெரியண்ணன் என்ற பயனரும் ஏறத்தாழ 5000படங்கள் இட்டுள்ளோம். அந்த அனுபவத்தின் அடைப்படையில் இந்த வார்ப்புருவை உருவாக்கினோம். பயன்படுத்து பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.
  3. தினம் 5 மருத்துவச்சொற்களுக்கு(பகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம்)படம் இடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நீங்கள் ஆய்ந்தெடுக்கும் சொற்களுக்கே முன்னுரிமை தருவேன்.உங்கள் ஆய்வுக்கு அப்படங்கள் உதவக்கூடும். அப்படங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின், அதன் உரையாடற் பகுதியிலேயே தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --த*உழவன் 00:56, 24 ஜூலை 2010 (UTC).

விக்சனரியில் மருத்துவ சொற்கள் தொகு

எனது அறிவுக்கு எட்டியவரையில் மருத்துவ ரீதியில் காணப்படும் அனைத்துப் பிழைகளும் திருத்தி அமைக்க உதவுவதில் எனக்கு மிக்க களிப்பே. தமிழில் மருத்துவம் என்பது சாத்தியமில்லை என்று பரிகசிக்கும் பலரின் மத்தியில் எனது உயிரினும் மேலான மொழியிலும் அறிவியல் வளர வேண்டும் என்று ஒரு சவாலாகவே எடுத்து சில ஆங்கில சொற்களை தமிழிற்கு மொழிபெயர்க்க எண்ணுகையில் பற்பல குழப்பங்கள் ஏற்பட்டது, கூகிளில் ஆங்கிலச் சொல்லுடன் "தமிழ்" என்று எழுதி தேடுகையில் விக்சனரி கிடைத்தது, எனது குழப்பத்திற்கும் தீர்வு கிடைத்தது, ஆனால் அதே நேரத்தில் வேறு சில சொற்களைப் பார்க்கும் போதே தவறுகள் புதைந்து உள்ளதையும் அறிய முடிந்தது.

செல்வா அவர்களும், த.உழவன் அவர்களும் இட்டிருந்த பின்னூட்டம் எனக்கு உவகையை அளிக்கிறது. வெல்லம் பற்றி நீங்கள் கூறிய சொல்லும் நன்றாகத்தான் உள்ளது. அனைத்து வெல்ல மூலக்கூறுகளையும் சரியான தமிழில் குறித்தல் அவசியம்.

Monosaccharide ஒற்றை இனியம் என அழைக்க உகந்தது, அதே போல Disaccharide, polysaccharide அழைக்கப்படவேண்டும்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்று ஒரு மாபெரும் முயற்சியில் சிறு தவறும் ஏற்படுவது உகந்தது அல்லவே. அங்கிருந்து எடுக்கப்பட்ட பல சொற்கள் சரியானதாக அமைந்து குழப்பத்தைப் போக்கினாலும் பிழைகள் "ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு " என்கின்ற கதையை உருவாக்கக்கூடும் அல்லவா. எனவே த.உழவன் கூறியது போல த.இ.ப விற்கும் தெரியப்படுத்துவது பற்றி என் எண்ணத்தில் இருந்தது, தற்போது நீங்கள் கூறியபின்னர் மனது நிம்மதி அடைகிறது. எனது இணையத்தில் இதற்கென ஒரு பகுதியை அமைத்து வேறுபாடுகளை அட்டவணைச்செயலியாக்க முனைகின்றேன். படம் பற்றிய குறிப்பிற்கு நன்றி. --சி. செந்தி 14:21, 24 ஜூலை 2010 (UTC)

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மாந்த முயற்சிகளில் பிழைகள் நேர்வது இயற்கை எனினும்,பல மாந்தர்கள் சேர்ந்து ஆக்கும்முயற்சிகளில் அது மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்ப்பு. Disaccharide, polysaccharide போன்றவற்றை முறையே இரட்டை இனியம் (அல்லது ஈரினியம்), பல்லினியம் எனலாம். நாம் த.இ.ப-வோடு சேர்ந்து இயங்கவும் கூடும். விக்கித்திட்டங்கள் போல் கலந்துரையாடினால் பயன் பெரிது, முறையும் எளிது.--செல்வா 16:11, 24 ஜூலை 2010 (UTC)
மேலும் இணையத்தில் பல்வேறு அகராதிகள் காணப்படுகின்றன, ஒரு சாரார் ஒருவகை சொற்களையும் மற்றையோர் வேறுவகை சொற்களையும் ஓரே சொல்லுக்குப் பயன்படுத்தும் போது எது சரியானது என்று எடுப்பதில் பலருக்கு குழப்பம்தான். உங்கள் அனைவரின் முயற்சிக்கும் எனது நன்றிகள்.--சி. செந்தி 20:20, 24 ஜூலை 2010 (UTC)

பழ.கந்தசாமி அவர்களின் நன்றி தொகு

  • செந்தி, உங்கள் ஆக்கங்களுக்கும், தெளிவுபடுத்தலுக்கும், திருத்தங்களுக்கும் நன்றி. பழ.கந்தசாமி 20:27, 24 ஜூலை 2010 (UTC)
  • நீங்கள் மருத்துவர்; இங்கு திருத்துவர்; சொல்பலப் பொருத்துவர். :) பழ.கந்தசாமி 20:30, 24 ஜூலை 2010 (UTC)
நன்றிக்கொரு நன்றியுடன் ஒன்றி மெருகூட்டும் சிறப்பு வரிகளை பார்த்து மகிழ்கிறேன்.--சி. செந்தி 20:37, 24 ஜூலை 2010 (UTC)
  • செந்தி, உதரவிதானம் சொல்லைச் சேர்த்துள்ளேன், என்போன்ற சாதாரணர்கள் இப்படிப்பட்ட சொற்களைப் பொருத்துவர் எனில் அதன்பொருளை உங்களைப் போன்ற மருத்துவர் பலர் திருத்துவர் என்று நம்புகிறேன் :) பழ.கந்தசாமி 20:58, 24 ஜூலை 2010 (UTC)
யாவரும் சாதாரணர்களே :) ; உதரவிதானம் என்னும் சொல் பற்றி அதன் பேச்சுப் பகுதியில் உரையாடுகின்றேன். --சி. செந்தி 21:17, 24 ஜூலை 2010 (UTC)

தொகு

இரண்டாவது பக்கத்தை உருவாக்குவது எப்படி?--சி. செந்தி 23:06, 24 ஜூலை 2010 (UTC)
  • புதிய சொற்களை உருவாக்குவது என்றால், மேலுள்ள பக்கபடிவம்(புதிய சொற்களைச் சேர்க்கவும்) அல்லது ஒரே எழுத்தாக இருப்பின் சிதையில் இருப்பது போல உருவாக்கலாம். --த*உழவன் 01:33, 25 ஜூலை 2010 (UTC)

மேலதிக பேச்சுப் பக்கம் உருவாக்கல் தொகு

தகவலுக்கு நன்றி, எனினும் நான் கேட்டது இந்தப் பேச்சுப் பக்கம் 30க்கும் மேற்பட்டுவருகிறது புதிய பக்கம் உருவாக்கவேண்டும் என்று மேலே தகவல் வந்தது, அதனால் எப்படி இரண்டாவது பேச்சுப்பக்கம் உருவாக்குவது ? நன்றி. --சி. செந்தி 09:52, 25 ஜூலை 2010 (UTC)

வணக்கம் . உங்களுடன் உரையாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பேச்சுப்பக்கம் உருவாக்க பயனர் பேச்சு:Drsrisenthil/1 என்றவாறு ஒரு புதியப்பக்கத்தை உருவாக்குங்கள். அதில் இந்த பக்கத்தில் உள்ள அனைத்து உரையாடலையும் நகலெடுத்து பயனர் பேச்சு:Drsrisenthil/1 என்ற புதிய பக்கத்தில் ஒட்டிவிடுங்கள். பிறகு இந்தப் பக்கத்தை காலியாக்கி, பக்கத்தின் மேற்புறத்தில் ஒரு முந்தைய உரையாடல் என்று பயனர் பேச்சு:Drsrisenthil/1 இந்தப்பக்கத்திற்கு ஒரு தொடுப்பு உருவாக்கிவுங்கள். ஆலமரத்தடி பக்கத்தில் மேல் வலது புறத்தில் தொகுப்புகள் என்று ஒரு வார்ப்புரு இருக்கும். அதனை பார்த்து பயன்டுத்துங்கள். நன்றி. --Inbamkumar86 09:10, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
உங்களது உதவிக்கு நன்றி இன்பம்குமார்--சி. செந்தி 11:59, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Drsrisenthil/1&oldid=775149" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Drsrisenthil/1".