Omanickam
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. -- Sundar 14:10, 19 ஜூன் 2006 (UTC)
மகிழ்ச்சி
தொகுஎண்ணற்ற தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்களுக்கு நீங்கள் பொருள் தந்து வருவதில் மிக்க மகிழ்ச்சி. நானும் பிற பயனர்களும் விரைவில் உங்களுடன் இணைந்து பழைய படி ஊக்கத்துடன் பங்களிக்க முனைவோம்--ரவி 09:43, 6 ஜூலை 2006 (UTC)
- ஆம். நானும் விரைவில் வருகிறேன். -- Sundar 13:34, 6 ஜூலை 2006 (UTC)
- நன்றி. குறைந்தது 5000 சொற்களாவது வேண்டும். அதன் பிறகுதான் இந்த விக்சனரி உபயோகமாக இருக்கும். ஒரு கை கொடுங்கள்! முடித்து விடுவோம். --Omanickam 17:06, 7 ஜூலை 2006 (UTC)
இன்றிலிருந்து என் பங்களிப்புகளை மீண்டும் தொடங்குகிறேன். (ஆனால் சிறு துளியாகத் தான் இருக்கும்..போகப் போக அனைவரும் சேர்ந்தால் பெரு வெள்ளமாக ஆகும்) நீங்கள் சொன்ன இலக்கு எளிதில் அடையக்கூடிய குறைந்தபட்ச பயனுள்ள இலக்கு. உங்கள் உற்சாகம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.--ரவி 15:12, 9 ஜூலை 2006 (UTC)
குறிப்பு
தொகுசொற்களுக்கான பொருளை சேர்க்கும் போது இயன்ற வரை, அவற்றை வெட்டி தொகுத்தல் சுருக்கத்திற்கான பெட்டியில் ஒட்டினீர்கள் என்றால் பிற பயனர்கள் அவற்றை அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்தே அறிந்து, தேவையானால் திருத்த உதவும். ஒவ்வொரு பக்கமாக சென்று பார்க்க வேண்டிய அவசியத்தை இது தவிர்க்கும். நன்றி.--ரவி 15:17, 9 ஜூலை 2006 (UTC)
- இதை தெரியப்படுத்தியதற்கு நன்றி. இனிமேல் சுருக்கத்தை நிரப்புகிறேன். ஏற்கனவே உள்ள வரலாற்றை மாற்ற முடியுமா? --Omanickam 04:48, 10 ஜூலை 2006 (UTC)
- சுருக்கத்தை நிரப்புகிறேன் என்றேன். இந்தப் பக்கத்தை தொகுத்ததின் சுருக்கத்தை நிரப்ப மறந்து விட்டேன்!! இதோ மீண்டும்! --Omanickam 04:57, 10 ஜூலை 2006 (UTC)
//ஏற்கனவே உள்ள வரலாற்றை மாற்ற முடியுமா?//-உங்கள் கேள்வி புரியவில்லையே? இன்னும் கொஞ்சம் விளக்குவீர்களா? --ரவி 06:58, 10 ஜூலை 2006 (UTC)
- பல சொற்களை தொகுக்கும் போது சுருக்கத்தை நிரப்ப விட்டுவிட்டேன். அந்த சொற்களின் வரலாற்றில், விட்டுப்போன சுருக்கத்தை நிரப்ப முடியுமா? --71.131.40.99 14:35, 10 ஜூலை 2006 (UTC)
வரலாற்றை மாற்ற இயலாது :) அதற்கு அவசியமும் இல்லை. இனி வரும் தொகுப்புகளில் மட்டும் மறக்காமல் தொகுத்தல் சுருக்கப் பெட்டியை நிரப்பி விடுங்கள். நன்றி--ரவி 13:02, 11 ஜூலை 2006 (UTC)
தமிழ் விக்சனரியின் முதன்மையான நோக்கம் எம்மொழிச் சொல்லுக்கும் (தமிழ் உட்பட) தமிழில் பொருள் தருவது. எனவே தமிழ்ச் சொல் தலைப்புகளில் பக்கங்களை உருவாக்கும்போதும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டும் தராமல் தமிழில் பொருளை விளக்க அல்லது ஒத்த சொற்களை தர முயலுங்கள். எடுத்துக்காட்டாக, அக்கா என்ற பக்கத்தை பாருங்கள். ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் என்பது போல் இருவழி அகரமுதலிகளையும் தாண்டி எம்மொழி - தமிழ், தமிழ்-பன்மொழி என்ற நோக்கில் இங்கு செயல்படுகிறோம். வருங்காலத்தில், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஆங்கிலம் தெரியாதவர்கள், தமிழ் மட்டும் அறிந்தோர், தமிழ் கற்கும் பிற நாட்டவர், குழந்தைகள் விக்சனரியை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம். எனவே இவ்வாறு தமிழ் சொற்களுக்கும் விளக்கம் தருவது அவசியமாகிறது. மிக எளிய சொற்களுக்கு இவ்வாறு விளக்கம் தருவது சிரமம் என உணரப்பட்டாலும், இயன்றவரை நாம் முயலலாம். ugly என்ற பக்கத்தில் அசிங்கம் என்று பொருளும், அசிங்கம் என்ற பக்கத்தில் என்ற மொழிபெயர்ப்பும் மட்டும் தந்தால், தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழியையும் சரியாக அறியாதோர் அதிகப் பயன் பெற இயலாமல் போகும் தானே?--ரவி 17:05, 12 ஜூலை 2006 (UTC)
Wiktionary:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் பக்கத்தில் இருக்க சொற்களை முன்னுரிமை கொடுத்து தமிழாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி--ரவி 12:12, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
பார்க்க:Wiktionary பேச்சு:புதிய பக்கத்தை உருவாக்குதல்--ரவி 10:25, 26 ஆகஸ்ட் 2006 (UTC)
வாக்குச் சேகரிப்பு :)
தொகுமாணிக்கம், தங்கள் பொன்னான வாக்குகள் தேவைப்படுகிறது. விவரங்களுக்கு பார்க்கவும் - விக்சனரி:பிற விக்கிமீடியா திட்டங்களுக்கான வாக்கெடுப்பு. நன்றி :)--ரவி 15:24, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
editcount
தொகுஉங்கள் பங்களிப்புகளின் அளவு, போக்குகளை இங்கு பார்க்கலாம். பயனுள்ள தளம். Optin செய்வதின் மூலம் மேம்பட்ட தகவல்களை பெற முடியும்--ரவி 21:46, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
நிர்வாகப் பொறுப்பு
தொகுமாணிக்கம், பக்கங்களை நகர்த்தி நிர்வாகப் பொறுப்பில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி. நீங்கள் விரும்பினால், நிர்வாகி பொறுப்புக்கு உங்களை பரிந்துரைத்து உங்களை தேர்ந்தெடுக்கச் செய்யலாம். இதன் மூலம் தேவையற்ற பக்கங்களை கண்காணித்து அவற்றை நீக்க உங்களால் முடியும். மேலும், சில தொகுப்புகளை எளிமையாக செய்யலாம். நன்றி--ரவி 08:26, 19 ஆகஸ்ட் 2006 (UTC)
- ரவி, நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். மடமடவென்று பக்கங்கள் குவிகின்றன. பக்கங்களை பரிசீலனை செய்து, தவறான பக்கங்களை நீக்க வேண்டும். நன்றி. --Omanickam 05:03, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
இங்கு சென்று, நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கவும். பிற பயனர்கள் வாக்களிக்க ஒரு கிழமை கால அவகாசம் தந்து பின்னர் வாக்கெடுப்பு நிலவரம்படி உங்களை நிர்வாகியாக்குவோம் (சும்மா, நம்மளே பரிந்துரைச்சு நம்மளே நிர்வாக்கியாகிக்க வேண்டியது தான்..இது ஒரு சனநாயக நடைமுறை :))--ரவி 16:30, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
மாணிக்கம், நிர்வாகப் பணிகளில் கூடுதல் பங்களிகப்புகள் உடனடியாகத் தேவைபடுவதால், ஒரு வாரம் பொறுக்காமல் உடனடியாக உங்களுக்கு நிர்வாக அணுக்கத்தை செயல்படுத்தி உள்ளேன். தினம் சில மணித்துளிகளாவது தளத்துக்கு வந்து தள நிர்வாகத்தில் உதவுவீர்கள் என்று நம்புகிறேன். வேண்டுகிறேன். நன்றி--ரவி 22:12, 1 செப்டெம்பர் 2006 (UTC)
- நன்றி ரவி! --Omanickam 09:09, 3 செப்டெம்பர் 2006 (UTC)
விக்சனரிப் புயல்
தொகுமாணிக்கம், உங்க சார்பாவும் சேர்த்து உமாசுதனுக்கு விக்சனரிப் புயல் பட்டமளித்துள்ளேன் ;) இது போல வேடிக்கையான வழக்கங்கள் விக்கிபீடியாவிலும் இருக்கு. பார்க்க: w:en:User:SimonP. அடுத்த 1000 சொற்களை சேர்ப்பவருக்கு என்ன பட்டம்னு நீங்க சொல்லிட்டா, நானே முனைந்து சேர்த்துடுறேன்..விக்சனரி வேங்கை, விக்சனரி வீரன், விக்சனரி express-னு என்கிட்ட சில பரிந்துரைகள் இருக்கு..எல்லாம் நம்ம ஊர்ல அரசியல்வாதி poster பார்த்து கத்துக்கிட்டது தான் :)--ரவி 10:07, 6 செப்டெம்பர் 2006 (UTC)
விக்கியாக்கம்
தொகுமாணிக்கம், எடுத்துக்காட்டு வாசகங்களை தரும் போது தற்பொழுத brush பக்கத்தில் உள்ள formatல் தரவும். இம்முறை dictionary.com தளத்தில் பின்பற்றப்படுகிறது. நிறைய பக்கங்களில் இம்முறையையே நான் பின்பிற்றியுள்ளேன். இந்த formatல் ஏதேனும் தேவை என்று கருதினாலும் பரிந்துரையுங்கள். பிறகு, பழைய பக்கங்களில் மாற்றங்களை செய்யும்போது அங்கு பலுக்கல் வார்ப்புருக்கள் இல்லாவிட்டால் பின்வரும் உரையை சேர்த்து விக்கியாக்கம் செய்ய உதவுங்கள்.
===பலுக்கல்=== * {{audio|en-us-{{PAGENAME}}.ogg|பலுக்கல் (ஐ.அ)}}
சொற்கள் எண்ணிக்கை
தொகுமாணிக்கம், இன்று நூற்றுக் கணக்கில் சொற்கள் சேர்க்கப்பட்டாலும், புள்ளி விவரக் கணக்கு காட்டும் சொற்கள் எண்ணிக்கை அதற்கேற்றவாறு ஏறவில்லை. இதற்கான காரணத்தை சரியாகப் புரிந்து கொள்ள இயலாவிட்டாலும், ஒரு ஊகம் மட்டும் உண்டு. உள்ளிணைப்பு இல்லாத பக்கங்களை ஒரு அதிகாரப்பூர்வப் பக்கமாக விக்கி மென்பொருள் இனம் காணாது என நினைக்கிறேன். முன்னர் புதுப்பக்க வார்ப்புருக்களில் உள்ளிணைப்புக்கான [[]] குறிகளை தந்திருந்தேன். ஆனால், சில புதுப்பயனர்களால் அதன் பயன்பாட்டை சரியாகப் புரிந்து பயன்படுத்த இயலாததால் அதை அண்மையில் நீக்கினேன். இதனால் பல பக்கங்களில் உள்ளிணைப்பு இல்லை. எனவே நீங்கள் பிற பயனர் பக்கங்களை சரி பார்க்கும்போது, பொருத்தமான இடங்களில் உள்ளிணைப்புகளை தருமாறு வேண்டிக் கொள்கிறேன். இயன்ற அளவு ஆங்கில விக்சனரி, dictionary.com தளங்களில் இருந்து எடுத்ததுக்காட்டு வாசகங்கள், கூடுதல் பொருள்கள், சொற் பயன்பாடுகளை சேர்ப்பதும் விரும்பத்தக்கது. புதுப் பயனர்கள், விக்சனரியின் முழுமையான செயல்பாடு, தரக்கட்டுப்பாடு ஆகியவைகளை உள்வாங்கி நிறைவாகச் செயல்பட சிறிது காலம் பிடிக்கும். அது வரை நம்மைப் போன்றவர்கள் தர மேம்பாட்டில் கவனம் செலுத்துவது சரியாக இருக்கும். தேடல் பெட்டிகளில் தேடுபவருக்கு சொல் கிடைக்கிறதா என்பது தான் முக்கியம். ஆகையால், தற்பொழுதைக்கு சொற்கள் எண்ணிக்கை பிழையை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என நினைக்கிறேன். விக்சனரியின் அளவை உயர்த்திக் காட்டாமல் தர மேம்பாட்டில் ஈடுபடவும் இது நமக்கு அவகாசம் அளிக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சொற்களின் எண்ணிக்கை, உள்ளிணைப்புகள் ஆகியவையும் விக்கிமீடியாவால் தர அளவுகோள்காக கருதப்படுகின்றன. உள்ளிணைப்பு தரும்போது பக்கம் முழுக்க சிகப்பு இணைப்புகள் அப்பிக் கிடப்பது போல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனி ஆங்கிலச் சொற்கள் போக, நீங்கள் செய்து வருவது போல் தமிழ்ச் சொற்களுக்கும் பொருள் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அப்பொழுது தான் சிகப்பு இணைப்புகள் நீலமாக மாறும். இரண்டு நாட்கள் முன்னர் என் வலைப்பதிவில் நம் விக்சனரி குறித்து எழுதி இருந்தேன் (என் வலைப்பதிவு இங்கே). அதன் பயனாக விக்சனரிக்கு கூடுதல் கவனிப்பும் பங்களிப்பும் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். உமாசுதனுக்கு அடுத்து இளஞ்சூறாவள் போல் இன்று அஜித் வந்து சேர்ந்திருக்கிறார் :)--ரவி 13:18, 8 செப்டெம்பர் 2006 (UTC).
- ரவி, editcount பக்கத்தில் Replication lag is currently 13 hours, 36 minutes என்று இருக்கிறது. எண்ணிக்கை ஏறாததற்கு அநேகமாக இதுதான் காரணமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். --Omanickam 16:55, 8 செப்டெம்பர் 2006 (UTC)
ஒவ்வொரு பக்கமாக தொகுத்து உள்ளிணைப்புகளை நான் சேர்க்க சேர்க்க சொற்கள் எண்ணிக்கை கூடுவதை கவனிக்க முடிகிறது. இருந்தாலும், நீங்கள் சொன்னவாறு பொறுத்திருந்தும் பார்ப்போம். --ரவி 20:07, 8 செப்டெம்பர் 2006 (UTC)
பார்க்க
தொகுபார்க்க பேச்சு:reference--ரவி 11:10, 10 செப்டெம்பர் 2006 (UTC)
சிபாரிசு
தொகுசிபாரிசு தமிழ்ச்சொல்லா என்று உறுதியாகத் தெரியாததால் அதை recommendation பக்கத்தில் இருந்து நீக்கித் தனியாக சிபாரிசு பக்கத்தில் தந்து இருக்கிறேன். நல்ல தமிழ்ச் சொற்களை முதன்மைப்படுத்தி பொருள் தரலாம் என்று நினைக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி--ரவி 14:18, 31 மார்ச் 2007 (UTC)
formating
தொகுமாணிக்கம், ஒத்த இரு பொருள்களை அடுத்தடுத்து தரும்போது ; கொண்டு பிரித்துக் காட்டலாம். , குறி ஒரு சொற்றொடருக்குள்ளும் வரலாம் என்பதால் அதைப் பயன்படுத்துவது குழப்பம் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, நகைச்சுவாயான; வேடிக்கையான. என்று தரவும். ஒரு வரியின் இறுதியில் முற்றுப்புள்ளியும் வைக்கலாம். நன்றி--ரவி 09:45, 8 ஏப்ரில் 2007 (UTC)
மீண்டும் வருக
தொகுமீண்டும் வருக :) நலமா? விக்சனரியில் சற்று ஆள் நடமாட்டத்தைக் காண இயல்வதில் மகிழ்ச்சி :) --ரவி 21:15, 24 ஜூலை 2007 (UTC)
Your admin status
தொகுHello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy. You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawiktionary, where you are an administrator. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies. If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights. We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard. Best regards, Rschen7754 03:15, 19 ஆகத்து 2014 (UTC)