Pitchaimuthu2050
வாருங்கள், Pitchaimuthu2050!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி
--Sodabottle 09:58, 11 ஏப்ரல் 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகு
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Pitchaimuthu2050,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
பக்க வடிவமைப்பு
தொகு- ஆர்வத்துடன் பல பக்கங்களில் இலக்கிய மேற்கோள்கள் சேர்த்துவருவதற்கு நன்றி. அப்படிச் சேர்க்கும்போது சொல்லுள்ள ஓரிரு வரிகளை மற்றும் இணைத்தால் போதும், முழுப்பாடலையும் சேர்க்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- மேலும், இப்போது நான் சேர்த்துவரும் வார்ப்புருக் கொண்ட பக்கங்கள் சிலவற்றை தலைப்புகளாக வருமாறு நீங்கள் மாற்றுவதைக் கவனித்தேன். இப்போதைய நான் இடும் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் உரையாடி அமைக்கப்பட்டது. ஆதலால் அவற்றில் பெருமாற்றங்களைச் செய்யவேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன். தலைப்புகள் இடுவதால் சிலவழிகளில் உதவும் என்பதை நான் அறிவேன், எனினும், நான் முதலில் வடிவமைத்தபடியே பக்கங்களைச் சேர்த்துவருவதன் காரணம், பக்கத்தை மறுவடிவமைக்க நாமனைவரும் முடிவு செய்யும்போது, வாரப்புருக்களை மாற்றிச் அதைச் செய்துவிடலாம் என்பதாலேயே. நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 16:46, 1 மார்ச் 2012 (UTC)
- தாங்கள் கூறிய கருத்து மிகச் சரியானதே. ஒரிருவரிகளை சேர்த்துக் கொள்வதே சிறந்தது அப்படியே இனிமேல் சேர்த்துக் கொள்ளலாம்.--Pitchaimuthu2050 (பேச்சு) 07:10, 2 மார்ச் 2012 (UTC)
- ஆனால் பக்க வடிவமைப்பு முற்றிலும் தவறானது. ஒருவேளை அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்து இருப்பினும் அது தவறானது என்பதையே கூற விளைகிறேன். ஏனெனில் ஒரு நபர் dail-up connection வைத்து இருந்தாலோ, அல்லது தனது கைபேசியில் இருந்து நமது தளத்தை பர்வையிட்டாலே அதிக bytes பகிரப்படுகிறது, மேலும் கைபேசி/கணினியில் யில் இருந்து ஒரு சிறிய பகுதியை தொகுக்க விரும்பினாலும் அதனைச் செய்ய இயவில்லை(இவ்வாறு இருக்கும் போது குறைந்த bytes பகிரப்படும்). நமது தற்போதைய வடிவைப்புபடி ஒரு சிறிய பகுதியைத் தொகுக்க முழு பக்கத்தையுமே தொகு (இவ்வாறு இருக்கும் போது ஒரு பக்கத்தில் உள்ள அனைத்து பக்க தரவும் bytes பகிரப்படும்) எனக் கொடுத்துவிட்டு செய்ய வேண்டுமென ஏன் பயனர்களை வற்புறுத்த வேண்டும்? சாதரணமாக ==== என உபயோகிப்பதே நலம். தற்போதுள்ள வடிவமைப்புபடி color மதிப்பு கொடுக்கப்படுவதால் ஒரு பக்கத்தை தரவிறக்கம் (Download) செய்யும் கருவிக்கு அதிக வேலையைக் கொடுக்கிறோம் என்பதையும் கூறிக்கொள்ள விளைகிறேன். இவ்வாறான -பட்சத்தில் கைபேசிக் கருவிகளில் Out-of_memory வரும் பிரச்சனைகளும் உள்ளது. ஒரு வேளை இந்த கருத்துக்களை விக்கிசனரி குழுமம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதுவே உண்மை. அன்புடன் -Pitchaimuthu2050 (பேச்சு) 07:10, 2 மார்ச் 2012 (UTC)
- தற்போதைய பக்கத்தைத் தரவிறக்க அதிகநேரம் ஆகும் என்பது உண்மை. அதைப்பற்றியும் உரையாடியுள்ளோம். மேலும் படம், உச்சரிப்புக்கோப்புகள் என விக்சனரிப் பக்கங்களைச் செறிவூட்டிவருகிறோம். அவற்றாலும் தரவிறக்கநேரம் அதிகமாகும். பக்கவடிவமைப்பு சரி, தவறு என்பதைவிடப் பக்கவடிவம் மாற்றப்படவேண்டும் என்று முடிவெடுக்கும்போது இப்போதைய பக்கத்தின் வார்ப்புருக்களை மாற்றி எளிதில் புது வடிவமாக்கிவிடலாம் என்பதே நான் முக்கியமாகக் கூறவந்தது. (அந்த அடிப்படையில்தான் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பல்லாயிரக்கணக்கான சொற்களும் பதிவேற்றப்பட்டன). பக்கவடிவ மாற்றங்களைப் பற்றி நிச்சயம் தொடர்ந்து உரையாடுவோம். நன்றி. 07:33, 2 மார்ச் 2012 (UTC)
தமிழ் காலத்தேர் !
தொகுமட்டற்ற; கட்டற்ற மகிழ்ச்சி. தங்களின் முனைப்பு காலத்தையும் கடந்து நிற்கக் கூடியது. பெருமகிழ்ச்சி. தொடருங்கள். தங்கள் படைப்புகளை..--த♥உழவன் (உரை) 00:32, 25 ஆகத்து 2019 (UTC)