பேச்சு:दिन

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஒரு பிரச்சினை!... दिन என்று சமசுகிருதத்தில் ஒரு பக்கம் உள்ளது...இதே சொல் இந்தியிலும் இருக்கிறது..இந்தி दिन பக்கத்தை தனியாகவே உருவாக்கினேன்...ஆனால் இந்த இந்திப் பக்கம் சமசுகிருத பக்கத்தோடு இணைந்து அந்தப் பக்கத்தையே இல்லாமல் செய்துவிட்டது...சமசுகிருதப் பக்கமும் இருத்தல் வேண்டும்...இம்மாதிரியான பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது...ஒரே எழுத்து வடிவமும், ஒரே சொல்லும் இரண்டு மொழிகளில் இருக்கும்போது, அவைகளை பதிவேற்றினால், இப்படிப்பட்ட குழப்பங்கள் விக்சனரியில் உண்டாகின்றன போலும்!...சமசுகிருதச் சொற்களையும் பதிவேற்றும் எண்ணம் இருப்பதால், இதற்கொரு வழிமுறை அவசியம் தேவைப்படுகிறது...இந்தியில் பற்பல சொற்கள் சமசுகிருதத்திலிருந்து வந்தேறி தத்சமம் ஆக விளங்குகின்றன...அத்தகைய சொற்களை பதிவேற்றுங்கால் இப்போது ஏற்பட்டதைப் போலவே இடர்ப்பாடுகள் உண்டாகுமே!----Jambolik (பேச்சு) 05:49, 25 நவம்பர் 2014 (UTC)Reply

இது இயல்பே. நீங்கள் குறிப்பிட்ட மொழிகளில் எடுத்துக்காட்டை என்னால் இப்பொழுது காட்ட இயலவில்லை. எனினும், இலத்தீனிய எழுத்துக்களில் ஏற்படும் இச்சூழ்நிலையை, பிற மொழி விக்சனரியினர் இப்படி சமாளிக்கின்றனர். காண்க: dove. மொழியின் தலைப்பை முதலில் நாம் குறிப்பிடுவதே, இச்சூழ்நிலையை எளிதாக்கத் தான்.--தகவலுழவன் (பேச்சு) 06:22, 25 நவம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:दिन&oldid=1262793" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "दिन" page.