பேச்சு:ஆரம்பம்

Latest comment: 1 மாதத்துக்கு முன் by 2409:40F4:305F:3FD4:2164:F20:6D7D:A63A in topic Science
-

आरम्भ..ஆரம்ப...என்னும் வடசொல்லே ஆரம்பம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு வேர்ச்சொல்..प्रारम्भ.ப்ராரம்ப என்பது இதே பொருளில் மற்றொரு வடமொழிச்சொல்...தூய தமிழ்ச்சொற்கள் துவக்கம், தொடக்கம் என்பவைகள்...இந்தப்பக்கத்தில் பகுப்பு:வடசொல் என்பது நீக்கப்பட்டிருக்கிறது--Jambolik (பேச்சு) 21:21, 10 பெப்ரவரி 2014 (UTC)

//தூய தமிழ்ச்சொற்கள் துவக்கம், தொடக்கம்// என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஆரம்பம் என்பது தமிழ் சொல்லன்று அல்லவா?--தகவலுழவன் (பேச்சு) 15:34, 11 பெப்ரவரி 2014 (UTC)
//ஆம்! ஆரம்பம் என்னும் சொல் தமிழ்ச்சொல் அல்ல...आरम्भ..ஆரம்ப4-...என்னும் வடசொல்லே ஆரம்பம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு வேர்ச்சொல்--Jambolik (பேச்சு) 15:54, 11 பெப்ரவரி 2014 (UTC)
அப்ப, பகுப்பில் வடசொல் என்பதை இணைக்கலாமா?--தகவலுழவன் (பேச்சு) 18:01, 11 பெப்ரவரி 2014 (UTC)
  • இணைக்கலாம்! ஆதி, ஆலயம் என்ற விக்சனரிப் பக்கங்களையும் கவனியுங்கள்...இதே பிரச்சினைதான்.--Jambolik (பேச்சு) 18:52, 11 பெப்ரவரி 2014 (UTC)


@Jambolik : ஆதி, ஆலயம், ஆரம்பம் ஆகிய சொற்களின் வேர்ச்சொற்கள்:
  1. ஆதி - பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் விளக்கம்: ஆதல்(ஆ+தல்) எனப் பொருள் படும் தொழிற்பெயர். ஆதி(ஆ+தி) என்றால் முதன்மை என்று பொருள் - குயில் இதழ்(24-6-1958) - கட்டுரை - "வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?" - பாவேந்தர் பாரதிதாசன். ஆதியிலிருந்து அதிகரிக்கும் செயல் அதி என்றும் மீதியிலிருந்து குறைக்கும் செயல் மிதி என்றும் வழங்கப்படும். இதனால், அதிகம் எனும் தமிழ்ச்சொல்லிற்கு மிகுதி எனும் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தினால், சிறிது பொருள் வேறுபடும். ஆதி என்பது வடசொல் என்று நினைத்து அகராதி எனும் தமிழ்ச்சொல்லை தற்காலத்தில் ஒதுக்குகின்றனர்.
  2. ஆலயம் - இச்சொல்லை விளக்கவேண்டுமென்றால் ஆலோசனை எனும் சொல்லின் வேரினை விளக்க வேண்டும். ஆல்+ஓசனை=ஆலோசனை. ஆல்=ஆலமரம். ஓசனை=யோசனை(ஓசனை எனும் சொல்லே உடம்படுமெய்யுடன் யோசனை என்றானது), எண்ணம், சிந்தனை. அக்காலத்தில் சித்தர்கள் மலைகள் மேலுள்ள பாழிகளில் தங்கியிருப்பர், ஆலமரத்திற்கடியில் அமர்ந்திருப்பர். மக்கள் தங்கள் துன்பங்களுக்குத் தீர்வு(ஓசனை) வேண்டி அங்கு வந்து தங்களுக்குத் தேவையான தீர்வைப் பெற்றுக்கொள்வர். அப்படி சித்தர்கள் வழங்கும் தீர்வுக்கு ஆலோசனை(சித்தர்களின் எண்ணம்/சிந்தனை/தீர்வு) என்று பெயர். சித்தரான சிவனுக்கு ஆலமர்செல்வன் எனும் பெயரும் இதனடியே தோன்றியதேயாகும். இதனடியே தோன்றியதே ஆலயம்(ஆல்+அயம்) எனும் சொல்லும். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் விளக்கம்: முன்னாளில், ஆலமரத்தடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்கு தீர்ப்பிடமாகவும்(மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்குமிடம், தற்கால பஞ்சாயத்து ஞாபகம் வருகிறதா?...இப்பண்பாட்டின் தொடர்ச்சி தான் பஞ்சாயத்து...), கல்வி பயிலிடமாகவும்(குருகுலக் கல்வி), விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே, பிற்காலத்தில் வணக்கத்திற்குரிய இடமாயிற்று. - குயில் இதழ்(8-7-1958) - கட்டுரை - "வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?" - பாவேந்தர் பாரதிதாசன்
  3. ஆரம்பம் - ஓர் கட்டுரையில் படித்திருக்கிறேன். தேடித் தருகிறேன். ஆரம்ப என்பதற்கு வடமொழியில் வேற்சொல்லினைத் தர முடியுமா?.


ஒரு இனத்தின் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்குப் பின்னும் அவ்வினத்தின் நீண்டகால வரலாறு அடங்கியிருக்கும். அப்படி தமிழரின் வரலாற்றைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கும் தமிழ் மொழியில் உள்ள பல சொற்களை, வடசொற்கள்(பிராகிருதம், சமஸ்கிருதம், முதலிய மொழிகள்) என தற்காலத்தில் பலர் பயன்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் உள்ள சொற்கள் காரணப்பெயர்கள் என்பதால், ஒன்றைக் குறிக்கப் பல சொற்களை உருவாக்க முடியும். இச்சிறப்பு தமிழ் மொழிக்கு இருப்பதனால், வடசொற்கள் என ஒதுக்கப்பட்ட பல சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கம் செய்யப்பட்டு தற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வடசொற்கள் என ஒதுக்கப்பட்ட தமிழ்ச்சொற்களுள் பல தமிழ் மொழியிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளில் வடமொழிக்குச் சென்றவை. ஈராயிரம் ஆண்டுகளில் வடமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் கலந்தன எனச் சிலர் கூறினர். அது தவறு. தமிழ்ச்சொற்கள் தான் வடமொழிக்குச் சென்றன. அப்படிச் சென்ற சொற்கள் பல காலப்போக்கில் பேச்சுவழக்கில் பல்வேறு திரிபுகளுடன் பிறமொழிகளில் வழங்கப்படுகின்றன. பழங்காலந்தொட்டு வழக்கில் இருந்து வரும் தமிழ் மொழியில் உள்ள சொற்களை ஆராயாமல் பிறமொழிச்சொற்கள் என ஒதுக்குவது நம் வரலாற்றை நமக்குத் தெரியாமல் நாமே அழிப்பது போலாகிவிடும் அல்லவா. அப்படி புதிய சொற்கள் உருவாக்கப்பட்டபொழுது,
  1. பலர், தமிழ்மொழியில் உள்ள ஒரு சொல், வடமொழியிலும் இருந்தால் அல்லது அச்சொல்லில் கிரந்தவெழுத்து இருந்தால், அச்சொல்லின் வேர்ச்சொல், பொருள், இலக்கணம், இலக்கிய வழக்கு, பலதரப்பட்ட மக்களின் பேச்சு வழக்கு, வரலாறு முதலியவற்றை ஆராய்ந்து தமிழ்ச்சொல்லா வடசொல்லா என வகைப்படுத்தியப்பின்பு புதிய சொற்களை உருவாக்கினர்.
  2. சிலர், தமிழ்மொழியில் உள்ள ஒரு சொல், வடமொழியிலும் இருந்தால் அல்லது அச்சொல்லில் கிரந்தவெழுத்து இருந்தால் அது வடமொழிச் சொல், தமிழ்ச்மொழிச் சொல்லல்ல எனுமொரு தவறான கண்ணோட்டத்துடன் பல சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்கள் உருவாக்கினர். அவர்கள் செயலின் அடிப்படை நோக்கம் சரியானதாக இருந்தாலும் கண்ணோட்டம் தவறாக இருந்தது. இத்தவறான கண்ணோட்டத்தினை பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலிய தமிழறிஞர்கள் தங்கள் சொல்லாய்வுகளில் குறிப்பிடுகின்றனர். --ச.பிரபாகரன் (பேச்சு) 09:18, 12 பெப்ரவரி 2014 (UTC)
  • ஒரு விவாத மேடையை உருவாக்கும் போலிருக்கிறது மேற்கண்ட கருத்துகள்...தேவையான விளக்கத்தோடு நிற்கவில்லை..(Answer to the point)...தமிழிலிருந்துதான் வடமொழிக்கு சொற்கள் போயின, வடமொழியிலிருந்து தமிழுக்கு சொற்கள் வரவில்லை என்பதைப்போல உள்ளது...இது மொழிகளின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ற, இயல்பான, இயற்கையான நிலையல்ல...மிகப் பண்டைய காலத்தில் இந்தியாவிலிருந்த மொழிகள் தமிழ் மற்றும் வடமொழி மட்டுமே...இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று உறவுக்கொண்டு சொற்களை கொடுத்து வாங்கிக்கொண்டு வளர்ந்த மொழிகளே...தமிழின் சிறப்பே பல மொழிகளின் சில சொற்களுக்காவது விளக்கம் தருவதாகும்...அதுவே உண்மை என்று சொல்வது கேள்விக்குரியதே!!திராவிடம் என்ற சொல்லையும் திரு + இடம் என்று பிரித்துப் பேசினர்... என்று அலையும் மனதை ஓரிடத்தில் இலயிக்கச் செய்யும் இடமே ஆலயம் என்றனர்...ஃஜாம்பியா(zambia) என்னும் நாட்டின் பெயரே தமிழ்தான் என்றனர்...செம்பு அங்கு அதிகமாகக் கிடைப்பதால்...அதோ மான் நிக்குது பார் என்ற சொற்களே அந்தமான் (தீவுகள்) ஆனதாகச்சொன்னார்கள்...இன்னும் சொல்லமுடியுமானாலும் விக்சனரியை விவாதமேடையாக்க விரும்பவில்லை!!! ஏதாவது கேட்டால் அதைப்பொறுத்தவரை இரத்தினச் சுருக்கமாக பதில் தந்தால் போதும்...மேலதிகமான விவரங்களைச் சொன்னால் மேலும் மேலும் சொல்லிழுக்கப்பட்டு விவாதம் பல கோணங்களில் நீளூம்...திரு.ச.பிரபாகரன் அவர்கள் சொன்னவை எனக்கு ஏற்கனவே தெரியும்...பல கருத்துகளோடு உடன்படுகிறேன்...சிலவற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை... ஆகையால் இதோடு இந்த விடயம் முடியட்டும்...நானும் இப்படி தவறு என்று நினைப்பதை சொல்லாமல் நிறுத்திக்கொள்ளுகிறேன்...நன்றி,வணக்கம் --Jambolik (பேச்சு) 15:38, 12 பெப்ரவரி 2014 (UTC)
திரு.Jambolik அவர்களே, பதிலுக்கு நன்றி...நான் விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு என் முந்தய பதிலின் கீழுள்ள பத்தியை எழுதவில்லை...இது விவாதிப்பதற்கான சரியான மேடையும் இல்லை...நீங்கள் பேச்சு:ஆதி பகுதியில் கொடுத்த பதிலுக்காக எழுதியது...என் நோக்கம் உங்களைக் குறை கூறுவதுமில்லை...என் நோக்கம், ஒரு இனத்தின் மொழியின் முக்கியத்துவம்...இதை முன்னிறுத்தித்தான் எழுதினேன்...நாம் வேற்றுமொழிச் சொல் என ஒதுக்கும் ஒவ்வொரு தவறான சொல்லும், நம் வரலாற்றை நாமே அழிப்பது மட்டுமல்ல, இன்னொரு மொழிக்கு இல்லாத வரலாற்றை உருவாக்குகிறோம்...இது பொதுவான கருத்து தான்...ஆனால், மூலக்கருத்து...
நம்மால் இதுநாள் வரை தமிழறிஞர்(!) என்றழைக்கப்படும் சிலர், ஒரு சொல்லை, அச்சொல்லின் வேர்ச்சொல், பொருள், இலக்கணம், இலக்கிய வழக்கு, பலதரப்பட்ட மக்களின் பேச்சு வழக்கு, வரலாறு முதலியவற்றை(etc) வைத்து ஆராய்ந்து அது வடசொல் என்றுக் கூறியிருக்க வேண்டும்...ஆனால், அவர்கள் எடுத்த எடுப்பிலேயே, ஒரு சொல் வடமொழியில் இருக்கிறது, ஆகையால் அது தமிழ்ச்சொல் அல்ல என அக்காலம் முதல் இதுநாள் வரை அவர்களின் கண்ணோட்டம் இருக்கிறது...அவர்களையும் சேர்த்துத்தான் நாம் தமிழறிஞர்(!) என அழைக்கிறோம்...ஆகையால் தான், என் முந்தய பதிலில் கீழுள்ள பத்தியை எழுத நேர்ந்தது...
பகவன் என்பதும் வடசொல் அல்ல...அதன் வேர்ச்சொல், நீங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எளிய சொல்லான பகு என்பதே...பகு+அவன்(அவு+அன், ஆண்பால் விகுதி)=பகவன்(ஒப்புநோக்குக:உழவன், மாணவன், கணவன், ஆதவன், முதலிய சொற்களும் இதேபோல் தான் உருவாகின). அதாவது, உழவுத் தொழிலை செய்பவன் உழவன் போல பகவுத் தொழிலைச் செய்பவன் பகவன்...இன்னொரு கோணத்தில் பார்த்தால், அனைத்தையும் பகுத்தறிந்தவன் என்பது பொருள்(தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதுதான்)...
நீங்கள் சிலவற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை எனக் கூறியிருந்தீர்கள்...உங்களுக்கு இது குறித்து ஏதாவது கூற வேண்டுமென்றால் என் பேச்சுப்பக்கத்தில் கூறலாம்...உங்களின் இரத்தினச் சுருக்க விளக்கத்தில் திராவிடம், அந்தமான், ஆலயம், சாம்பியா(Zambia) போன்றவற்றின் விளக்கங்கள் தேவையேயில்லை...நன்றி, வணக்கம்...--ச.பிரபாகரன் (பேச்சு) 22:14, 12 பெப்ரவரி 2014 (UTC)
  • இந்தப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதி, ஆரம்பம், ஆலயம், பகவன், அதி(கம்) ஆகிய அனைத்துச்சொற்களும் வடமொழிச் சொற்களே என்று மறைமலையடிகளாரின் புதல்வி திருவாட்டி தி.நீலாம்பிகை அம்மையார் இயற்றிய 'வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்' என்ற நூலில் காட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்...அவை வடசொற்கள்தான் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை என்று நினைக்கிறேன்...நான் தவறு என்று நினைப்பதை சொல்லாமல் நிறுத்திக்கொள்ளுகிறேன் என்று ஏற்கனவே இந்தப்பக்கத்தில் சொல்லியிருப்பதால் நீங்கள் குறிப்பிட்டவாறு உங்கள் பேச்சுப்பக்கத்தை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணமில்லை...வீணான விவாதத்தில் ஈடுபட்டு, என் 75 (எழுபத்தி ஐந்து) வயது மூளையைக் கசக்கிப் பிழிந்துக்கொள்ளவும் விருப்பமில்லை...வணக்கம் பல...நன்றி...--Jambolik (பேச்சு) 00:27, 13 பெப்ரவரி 2014 (UTC)
  • திராவிடம், அந்தமான், ஆலயம், சாம்பியா (Zambia)--இச் சொற்களை ஏன் குறிப்பிட்டேன் என்றால், எப்படி பிறமொழி சொற்களுக்கு வலிந்து தமிழில் வேர் காண முயற்சிக்கப்படுகிறது என்பதைச் சுட்டுவதற்காகத்தான்...தவறு என்றால் 'sorry'..--Jambolik (பேச்சு) 00:39, 13 பெப்ரவரி 2014 (UTC)
திரு.Jambolik அவர்களே, உங்கள் விளக்கத்திற்கு நன்றி...நான், ஆராயாமல் தனித்தமிழ் சொற்கள் உருவாக்கினார்கள் என்று கூறியவர்களுள் முக்கியமானவர்கள் இவர்கள்(மறைமலையடிகள், அவரது புதல்வி நீலாம்பிகை அம்மையார்) தான்...தன் உண்மையான பெயரான வேதாசலம் எனும் பெயரை, வடமொழிப் பெயர் எனக் கூறி, மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டவர் தான் இவர்...இவர் தான் தனித்தமிழ் இயக்கம் எனும் இயக்கத்தை 1916ஆம் ஆண்டின் அளவில் உருவாக்கியவர்...இவர் உண்மையாக ஆய்ந்திருந்தால், வேதம் என்பது தமிழ்ச்சொல் என்பது அவருக்குப் புலப்பட்டிருக்கும்...
வேய் - உயரமாக வளரும் ஒரு வகை மூங்கில்(பெ.சொ.), மறைக்கும் செயல்(வி.சொ.). வேய்து(வேய்தல்) - கோயம்பத்தூர், மதுரை பக்கம் பேசும் வழக்கில் கூரை வேய்வது எனக் கூறுவர். இதன் பொருள் மறைப்பது. செய்>செய்து>செய்தல் என்பதைப் போல. வேய்தம்(வேய்து+அம்)>வேதம் - ஒன்றை மறைத்து வைத்திருக்கும் பண்பைக் கொண்டது. இதனடியே தோன்றியது தான் வேந்தன் எனும் சொல்லும் கூட...வேய்ந்து+அன்=வேய்ந்தன்>வேந்தன்...மக்களை முன்னின்று காப்பவன் எனப் பொருள்படும்...
இப்படி இவர்கள் ஆய்ந்துப் பிரித்திருந்தால், வடசொல் தமிழ் அகர வரிசை, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் ஆகிய நூல்களில் உள்ள முக்கால்வாசிச் சொற்கள் தமிழ்ச் சொற்களாக இருந்திருக்கும்...அவர்கள் செயலின் அடிப்படை நோக்கம் சரியானதாக இருந்தாலும் கண்ணோட்டம் தவறாக இருந்தது...
உங்கள் மேல் குறை கூறவேண்டும் என்று எனக்கு நோக்கம் இல்லை...இது argument அல்ல discussion தானே...sorryயெல்லாம் எதற்கு...இது ஆக்கப்பூர்வமான விவாதமாக இருந்தது...அதற்கு நன்றிகள் ஐயா...--ச.பிரபாகரன் (பேச்சு) 01:19, 13 பெப்ரவரி 2014 (UTC)
  • ஆதி, ஆரம்பம், ஆலயம், பகவன், அதி(கம்) ஆகிய இந்தச் சொற்கள் வடமொழியே என சென்னை பல்கலை.பேரகராதியிலும் குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது...மறைமலையடிகள்/அன்னாருடைய புதல்வி ஆகியோரின் தமிழ்ச்சொல்லாய்வைப்பற்றி உங்களைப்போன்றே கருத்துக் கொண்டவர்கள் வேறு எவரேனும் உள்ளனரா?...முடியுமானால் பாவேந்தர் பாரதிதாசனின் இந்தச் சொற்கள் தொடர்பான கட்டுரைகளுக்கு இணைப்பு கொடுத்தால் சிறப்பாகயிருக்கும்--Jambolik (பேச்சு) 06:27, 13 பெப்ரவரி 2014 (UTC)
திரு.Jambolik அவர்களே, சென்னை பல்கலை.பேரகராதியில் உள்ள குளறுபடிகள் பற்றி தேவநேயப் பாவாணர் சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) எனுமொரு நூலே எழுதியுள்ளார்...இந்நூலைப் படித்தபின், இவ்வகராதியை வேர்ச்சொல்லாய்வுகளுக்குப் பயன்படுத்தலாமா வேண்டாமா என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்...இவ்வகராதியை, சொற்பொருள் அறிய பயன்படுத்தலாமே தவிர, வேர்ச்சொல்லாய்வுகளுக்குப் பயன்படுத்த முடியாது...
மறைமலையடிகள்/அன்னாருடைய புதல்வி ஆகியோர் செய்த தவறை ஆதாரத்துடன், ஒருவர் சுட்டிக்காட்டினாலும் அது தவறுதானே...இதற்கு மேற்கோள் தேவை இல்லையே...
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இச்சொற்களுக்கான கட்டுரைகளின் இணைப்புகள் இல்லை...ஆனால், அவர் நடத்திய குயில் இதழில் வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனுமொரு வேர்ச்சொல்லாய்வுக் கட்டுரையை எழுதி வந்தார்...அதில், நீங்கள் கேட்ட அனைத்து சொற்களுக்கும் விளக்கம் இருக்கிறது...இக்கட்டுரைகளின் தொகுப்பு ஒரு நூலாகவே வெளிவந்தது...வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?...செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி எனும் வேர்ச்சொல் அகராதியும் உதவும்...--ச.பிரபாகரன் (பேச்சு) 10:05, 13 பெப்ரவரி 2014 (UTC)
  • உங்கள் விளக்கங்களுக்காக மிக்க நன்றி...நான் தமிழ்நாட்டைவிட்டு நீங்கி சுமார் 43 ஆண்டுகளாகின்றன...அந்தப் பக்கம் வரும்போது நீங்கள் தெரிவித்த புத்தகங்களுக்காக முயல்வேன்...இன்னும் பற்பல கேள்விகளிருக்கின்றன...அவைகளுக்கு உங்களிடமிருந்து நிறைவான விடை காணவேண்டுமென்றால், அது தொடர்ந்த கேள்வி, மறுகேள்விகளுக்கு வழி வகுத்துவிடும்...அதற்கு இந்த இடம் ஏற்புடையதல்ல...எனக்கும் விருப்பமில்லை...பார்க்கலாம்...Bye--Jambolik (பேச்சு) 16:07, 13 பெப்ரவரி 2014 (UTC)
நன்றி ஐயா... --ச.பிரபாகரன் (பேச்சு) 00:33, 14 பெப்ரவரி 2014 (UTC)
விக்கிமூலத்தில், பாவாணரின் சென்னைப் பல்கலைக் குறித்த மூல உரையின் ஒரு பகுதி உள்ளது. உங்கள் இருவரின் ஆழமான உரையாடல், தமிழின் தொன்மையை விளக்கியது. தொன்மை ஆராய்ச்சியே மயக்கத்திற்கு உரியது என்பதை உணருகிறேன். மறைமலையடிகளுக்கும், பாவாணருக்குமே பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாக அறியமுடிகிறது. அத்தகையதொரு, கருத்துவேறுபாடாகவே நான் இதனை கருதுகிறேன். தொடர்ந்து விக்சனரியில் தங்களது ஆக்கப்பணியை செய்ய வேண்டிக்கொள்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 18:14, 14 பெப்ரவரி 2014 (UTC)
நன்றி தகவலுழவன் அவர்களே...--ச.பிரபாகரன் (பேச்சு) 02:33, 15 பெப்ரவரி 2014 (UTC)

Vanakkam

தொகு

How to say vanakkam 2409:4071:4E0F:D58:0:0:E608:C70E 14:50, 13 திசம்பர் 2022 (UTC)Reply

எனக்கு சிறகு முளைத்தால்

தொகு

பேச்சு 103.21.166.74 14:44, 3 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Science

தொகு

Science 2409:40F4:305F:3FD4:2164:F20:6D7D:A63A 12:39, 5 திசம்பர் 2024 (UTC)Reply

Science

தொகு

Science 2409:40F4:305F:3FD4:2164:F20:6D7D:A63A 12:40, 5 திசம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆரம்பம்&oldid=1998428" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆரம்பம்" page.