பேச்சு:எதிர்மின்னி

  • நீங்கள் மொழிமாற்றம் செய்த இப்படம் அற்புதம். இப்படத்தில் பயன்படுத்திய எழுத்துரு என்ன? என்பதை அறிய ஆர்வம்.தகவலுழவன் 02:46, 14 ஜூன் 2009 (UTC)
இந்த எழுத்துருவுக்கு பைரவி என்று பெயர். இதனை உருவாக்கியவர் தமிழ்க் கணிமை முன்னோடி முனைவர் விசயக்குமார் என்பவர். இவர் டொரோண்ட்டோவில் இருக்கின்றார். இவர் கருநாடக இராகங்களில் பெயர்களில் பல எழுத்துருகள் 1990களில் உருவாக்கி பயன்பாட்டில் விட்டிருந்தார். அவற்றுள் சில, பைரவி, கீரவாணி, காம்போதி, சரசுவதி. 20-30 எழுத்துருகள் இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி தகவலுழவன்.--செல்வா 03:48, 15 ஜூன் 2009 (UTC) அவை ஒருங்குறி (யுனிக்கோடு) காலத்துக்கு முந்தியவை.--செல்வா 03:49, 15 ஜூன் 2009 (UTC)
    • நீங்கள் கூறிய தமிழ் கணிமை வரலாறு, என்னை நெகிழ வைத்துவிட்டது.தமிழ்க் கணிமை வளர்த்த பெரியோர் (முனைவர் திருமிகு.விசயக்குமார் போன்று ..) குறித்து, மேலும் அறிய ஆவல். அவை சிறப்பாக தொகுக்கப்பட்ட, தளமேதும் இருக்கிறதா? பைரவி எழுத்துருவின் இலயம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நானும் அதனைப் பயன்படுத்த விருப்பம். அதனை, நான் எங்ஙனம் பெறுவது? நீங்கள் என் மின்னஞ்சலுக்கு(tha.uzhavan at gmail), அதனை அனுப்ப இயலுமா?(தகவலுழவன்)

Start a discussion about எதிர்மின்னி

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:எதிர்மின்னி&oldid=305977" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எதிர்மின்னி" page.