பேச்சு:சேர்த்தியம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
தமிழ் இலக்கியங்களில், சேர்த்தியம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தேன். இல்லை என வந்தது. ஆனால், சேர்த்திய என்ற தேடியபோது, பின்வரும் இலக்கிய மேற்கோள்கள் கிடைத்தன. தமிழ் இலக்கியம் கற்றோரே இதன் பொருத்தத்தைக் கூற இயலும்.
- அகநானூறு: மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி
- பதிற்றுப்பத்து: மனை சேர்த்திய வல் அணங்கினான்
- திருமுருகாற்றுப்படை: ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
- பதினோராம் திருமுறை: ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை\
- கம்பராமாயணம்: செய்ய பூம் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு, சால
- கந்தபுராணம்: சிந்தை செய்திடேல் எம் முடி சேர்த்திய சிறப்பால்
- மணிமேகலை: செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
- தேம்பாவணி: சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி, சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம்?
- தேவாரம்: செல்வர் ஆக நினையும் படி சேர்த்திய செந்தமிழ்
- வில்லிபாரதம்: தேக்கிய செங் கனி இதழ் ஆர் அமுது உண்டு உண்டு, சேர்த்திய கைந் நெகிழாமல் சேர்ந்து சேர்ந்து,