பேச்சு:table
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
மேசை தமிழ்ச்சொல் இல்லை என்று நினைக்கிறேன். மாற்றுச் சொல் உண்டா? பலகை என்றால் bench என்று தானே பொருள் வரும்?--ரவி 11:03, 16 நவம்பர் 2006 (UTC)
- மேசை போத்துக்கீச மொழிச் சொல். தமிழ் அகராதியில் இதற்குச் சரியான தமிழ்ச் சொல் எதுவும் தரப்படவில்லை. வியப்பாக இருக்கிறது, தமிழர்கள் ஆங்கிலேயர் வருவதற்குமுன் மேசையைப் போன்ற ஒன்றை அறிந்திருந்ததே இல்லையா? bench என்பதற்கும் பலகை என்று சொல்லும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் வாங்கு என்போம். இதுவும் போத்துக்கீசச் சொல்தான். Mayooranathan 08:11, 17 நவம்பர் 2006 (UTC)
- எங்கள் ஊரில் table loom என்பதைக்கூட மேசைத் தறி என்றுதான் அழைக்கிறார்கள். இது போர்த்துகீசச் சொல் என்று அறிந்திருந்தாலும் வேறு மாற்றுச் சொல் எனக்குத் தெரியவில்லை. Bench என்பதை சில நேரங்களில் மேடை என்பர். தேவநேயப் பாவாணர் stool என்பதற்கு மொட்டல் என்றொரு சொல்லை உருவாக்கினார். நாற்காலி, முக்காலி என்று சொற்கள் இருக்கும்போது இவற்றிற்கு தமிழ்ச் சொற்கள் இல்லாதது வியப்பளிக்கிறது! -- Sundar 08:42, 17 நவம்பர் 2006 (UTC)
எங்கள் ஊர் பக்கம் bench என்பதற்கு பலகை என்று சொல்வது வழக்கமான விதயம். இது பெரும்பாலும் மரப்பலகையாக இருப்பதும் காரணம். bench தவிர மிகச் சிறிய அளவில் ஒருவர் மட்டும் தரையில் அமர உதவுவதும் பலகையே (பலகைக் கட்டை)..எனவே இந்தப் பெயர் benchஐ குறிக்காமல் அது செய்யப்பட்டுள்ள மரத்தையும் குறிக்கலாம்--ரவி 09:16, 17 நவம்பர் 2006 (UTC)