- இத்தக் காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும்...இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்...
- இந்தக் காய்களின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பில் 2-3 குன்றி எடை நசுக்கி, முலைப்பாலில் ஊறப்போட்டு, வடிகட்டி மூக்கின் வழியாக 2-3 துளி விட, மூக்கிலும் வாயிலும் கபத்தை வெளியாக்கும்...இதனால் மூர்ச்சை, பற்கிட்டல், காக்கைவலி முதலியவைகள் போகும்...
- தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்ற தங்க நகைகள், அதிகப் பயன்பாட்டால் மங்கிப்போகும்...அச்சமயத்தில் உலர்ந்த மணிப்புங்குக்காய் கழுவிய நீரில் போட்டு, சற்றுக் கைவிரல்களால் அல்லது மெல்லிய புருசால் தேய்த்து எடுத்தால் புத்தம் புது நகைகளைப் போல் ஒளிரும்.