மரக்கால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மரக்கால்
- முகத்தலளவைக்கருவி வகை; 1/12 கலம்; எட்டுப் படி
- ஒரு மரக்கால் விரைப்பாடு
- மரத்தால் செய்த பாதம்
- ஆண்டு மழையின் அளவு. ஒருமரக்கால் மழை இவ்வருடத்தில்
- திருமால் கூத்து வகை
- துர்க்கைக் கூத்து - கூத்துப் பதினொன்றனுள் வஞ்சத்தால் வெல்லுதல் கருதிப் பாம்பு தேள் முதலியவாய் அவுணர் புகுதலையுணர்ந்து துர்க்கை அவற்றை யுழக்கிக் களைதற்கு மரத்தால் செய்த காலைக்கொண்டுஆடிய ஆட்டம்
- உப்பளம்
- ஆயிலிய நாள்
- சோதி நாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a grain measure, varying indifferent places = 8 padi = 1/12 of kalam = 400 cu. in., as originally made of wood
- superficial measure = 3362 sq. ft., as requiring a marakkal of seed to sow it
- crutch; wooden leg
- (Astrol.) measure of rain for the year, determined by the ruling planet
- a dance of Viṣṇu
- a dance of Durga on stilts, slaying the Asuras who attacked her assuming the shapes of reptiles, oneof 11 koottu
- salt pan
- the ninth star
- the fifteenth star
விளக்கம்
- களத்தில் தானியத்தை அளப்பதற்கு மரக்கால் பயன்பட்டது. பெரிய மரக்கால், சின்ன மரக்கால் வழக்கிலிருந்தன. வீட்டு உபயோகத்திற்குப் படி எனப்படும் இரும்பு அளவு பயன்பட்டது. பெரிய படி, அரைப்படி, கால்படி, அரைக்கால் படி, வீசம்படி, அரை வீசம்படி போன்ற படிகள் இன்றுகூட வீடுகளில் உள்ளன. படியை உழக்கு என்று குறிப்பிடுவார்கள். 11/2 லிட்டர் அளவு என்பது ஒருபடி ஆகும். நான்கு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு பெரிய மரக்கால், இரண்டு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு சிறிய மரக்கால் எனப்பட்டன (அளவைகளின் மூலம் மதிப்பீடுகள், ந.முருகேசபாண்டியன்)
பயன்பாடு
- முதல் மரக்கால் நெல்லை சாக்கிற்குள் கொட்டும்போது, லாபம் என்று சொல்வார்கள்; ஒன்று எனச் சொல்லும் வழக்கமில்லை (அளவைகளின் மூலம் மதிப்பீடுகள், ந.முருகேசபாண்டியன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மரக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +