வாவி
வாவி(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tank, reservoir of water, lagoon
- well with a flight of steps down to the water
- stream of water running in a riverbed
விளக்கம்
பயன்பாடு
- ஒரு நாள் விறகுவெட்டி வாவிக்கரையிலே நின்ற பட்டமரத்தை வெட்டினான். வெட்டும்போது பாடிப்பாடி வருத்தம் தெரியாமல் வெட்டினான். இடையிலே, கோடரி, காம்பு கழன்று வாவியுள் விழுந்தது. (விறகுவெட்டி, சிறுவர் செந்தமிழ், சோமசுந்தரப் புலவர்)
(இலக்கியப் பயன்பாடு)
- .... செருந்தி நீடி செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்.... (பட்டினப் பாலை அடி எண்: 244)
- வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும் (நீதிவெண்பா)
- மன்னு தண்பொழிலும்வாவியும் (திவ். பெரியதி. 2, 3, 10).
- வண்டார் குவளைய வாவியும்(சீவக. 337).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +