துணிகளில்சாயமேற்றும் நுட்பங்களில் நம்மவர்கள் உலகில் தலைசிறந்து விளங்கினார்கள். பண்டைய சாயமேற்றும் முறைகள் உலகிலுள்ள அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது. அவுரிச் செடிகளைப் பயிரிட்டு அதிலிருந்து நீலநிறச் சாயம் உற்பத்தி செய்து இச்சாயத்தை நூல்களுக்கும், துணிகளுக்கும் சாயமேற்றி அழகூட்டினர். இந்தியாவில் இருந்து இந்த நீலநிறத்தைத் தெரிந்துகொண்டதால்தான் இதற்கு இண்டிகோ நீலம் என்ற பெயர் உலக அளவில் ஏற்பட்டது. சுண்ணாம்பு, சங்கு, முட்டை ஓடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறங்களும், நிறமேற்றிகளும்உற்பத்தி செய்யப்பட்டன.