அகத்துக்காரி

தமிழ் தொகு

(கோப்பு)
 
ஓர் அகத்துக்காரி தன் கணவனுடன்
 
ஓர் அகத்துக்காரி தன் கணவனுடன்
 
ஓர் அகத்துக்காரி தன் கணவனுடன்

பொருள் தொகு

அகத்துக்காரி, பெயர்ச்சொல்.

  1. மனைவி
  2. இல்லக்கிழத்தி
  3. இல்லத்தரசி
  4. இல்லாள்
  5. வீட்டுக்காரி
  6. பாரியை
  7. பாரியாள்
  8. பெண்டாட்டி
  9. மனதை ஆட்கொண்டவள்
  10. மனதை நிர்வகிப்பவள்

விளக்கம் தொகு

  • பேச்சு வழக்கில் ஆத்துக்காரி...அகம் என்றால் வீடு. வீட்டுக்கு உரியவள் வீட்டுக்காரி என்பதைப்போல் அகத்துக்கு உரியவள் அகத்துக்காரி
  • மனம் என்றால் அகம். என் மனத்துக்குரியவள். என் மனதை ஆள்பவள். என் அகத்துக்குரியவள். ஆதலால் என் அகத்துக்காரி
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள்; புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது உள்ளே இருப்பவர்- மனதின் உள்ளே இருப்பவர். திருமணம் செய்த பின்னர், மனதின் உள்ளே (அகத்திற்குள்) பிரதானமாக இருப்பவர் - மனைவி . எனவே மனைவியை குறிப்பதற்கு கணவர்கள் அகத்துக்காரி என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். இதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே வெகு காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது - இந்த வார்த்தையை கணவன் தனது மனைவியை குறிப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தை. மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. wife
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்துக்காரி&oldid=1906808" இலிருந்து மீள்விக்கப்பட்டது