பாரியாள்
ஒலிப்பு
|
---|
பொருள்
பாரியாள்(பெ)
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---भार्या--பா4ர்யா--வேர்ச்சொல்...இந்தசொல்லின் மனைவி என்னும் பொருளைப் பொறுத்தவரை சமசுகிருதச்சொல்லே ஆதாரமாகும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பாரியாள் ரூபவதி சத்ரு - பழமொழி
- சீதையை இராவணன் கவர்ந்து சென்றதை வைத்துதான், "பாரியாள் ரூபவதி சத்ரு" என்ற பழமொழி ஏற்பட்டதா? அல்லது இவ்வாறு கூறப்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? ([1])
- எங்கள் தம்பி யிடத்திலிருந்து வந்த கடிதத்தில், எங்கள் பிள்ளை சுழிமாந்தங் கண்டு இறந்துபோனதாக எழுதியிருந்த படியால், நானும் என் பத்தினியும் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. என் பாரியாள் மட்டும் பிள்ளை விஷயத்தில் ஏதாவது மோசம் நடந்திருக்குமென்று சந்தேகித்தாள். எனக்கு என் தம்பியிடத்தில் இருந்த விசுவாசத்தினால் அவள் சந்தேகப்படுவது சரியல்ல என்று கண்டித்தேன். (பிரதாபமுதலியார் சரித்திரம்)
- அவசரமின்றி நடந்து, ஊருக்குத் திரும்பும் வலப்பக்கச் சாலையை அடைகிறார். இங்கே வலப்புறத்தில் - ஒரு சுமைதாங்கி இருக்குமே! தன் சுமையைச் சற்று நேரம் இறக்கி வைக்க எண்ணி சுற்று முற்றும் பார்க்கிறார். பலகையான முதுகுடன் நான்கு கால்களையும் வெளிப் பக்கமாய் அகலப்பரப்பி நிற்கிற ஒட்டகம் போல- கற்பலகையின் பக்க வாட்டில் 'றா.சின்னய்யாப் பிள்ளையின் பாரியாள் லோகாம்பாள் ஆச்சி தருமம்' என்று கோணல்மாணலான எழுத்தில் செதுக்கி வைத்து - எந்த நேரத்தில் சரிந்து விழுமோ எனும்படி அச்சம் தருவதாய் ஆண்டாண்டு காலமாய் நின்று கொண்டிருந்த அந்தச் சுமைதாங்கி எங்கே? (கால நதிக்கரையில், வே.சபாநாயகம், திண்ணை)]
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாரியாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி