பொருள்

அங்காடி, .

  1. பெரிய கடை
  2. ஓரிடத்தில் பலவகைப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் அல்லது பல கடைகள் ஓரிடத்தில் அமைந்துள்ள இடம்
மொழிபெயர்ப்புகள்
  1. shopping mall, shopping complex ஆங்கிலம்
விளக்கம்
  • அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல். (தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவி விற்றுச் செல்வோரை அது குறிக்கிறது) இக்காலத்தில் "பசார்" என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது. பெரிய நகரங்களில் அந்தியும் பகலும் அங்காடி நடைபெற்றது. அந்தியில் நடைபெற்ற அங்காடியை "அல்லங்காடி" என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை "நாளங்காடி" என்றும் அழைத்தனர்.
பட்டினத்தடிகள், அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார். "அங்காடி நாய் போல் அலைந்து திரிந்தேனே" என்பது அவர் பாட்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்றும் "அங்கடி" என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு. தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் (மொழியில்) அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்? செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு "அணிகல அங்காடி" என்று பெயரிட்டுள்ளார். சென்னையிலுள்ள மூர் மார்க்கட்டை, மூரங்காடி என்று வழங்கும் நாள் எந்நாளோ? (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்காடி&oldid=1986540" இலிருந்து மீள்விக்கப்பட்டது