அண்டப்புளுகன்
பொருள்
அண்டப்புளுகன்(பெ)
- அப்பட்டமாகப் பொய் சொல்பவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயிலை அடுத்த அரை மணி நேரத்தில் பிடித்து விட்டேன். அவ்வளவு வேகம் என் குதிரை, என்று அளந்தான் அண்டப்புளுகன் ([1])
- எத்தகைய அறிவோடு இத்தகைய பொய்களைக் கூறுகிறார்கள்? அண்டப்புளுகன் ஆகாயப் புளுகன் என்றெல்லாம் கூறுவார்கள். அனைவரையும் விஞ்சிய புளுகு இதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது. (புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டாமா?, சோ.க.அறிவுடைநம்பி, கீற்று)
- அண்டப்புளுகன் கோயபல்ஸ் - அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதையெல்லாம் தாண்டி வரையறையின்றி புளுகி ஈற்றில் அழிந்துப் போனவர்தான் கோயபல்ஸ். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற கூற்றின் நிதர்சனமாக வாழ்ந்தவர் (அண்டப் புளுகன் கோயபல்ஸ், தமிழ்மணம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அண்டப்புளுகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +