தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அறைதல், பெயர்ச்சொல்.
  1. அடித்தல்
    அறைந்தகற் றூணிடை வந்தாய் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் கிருட்..)
  2. பறைமுதலியன கொட்டுதல்
    அறைபறை யன்னர் கயவர் (திருக்குறள் )
  3. கடாவுதல்
    நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு வமிசம் இந்துமதி..)
  4. சொல்லுதல்
    ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பராமாயணம் சிறப்பு
  5. துண்டித்தல்(தொல்காப்பியம் பொ. உரை)
  6. மண்ணெறிந்து கட்டுதல்
    மண்சுவர் நாலுபடையறைந்தேன்
  7. ஒலித்தல்
    அறைகழல் வீரர் (நைடத.நாட்..) #அலைகாற்று முதலியன மோதுதல்
    முரசறையு மாக்கடல் காரென வார்த்தன(சீவக சிந்தாமணி )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to slap, strike
  2. to beat, as a drum
  3. to hammer, as a nail
  4. to speak, utter, declare
  5. to cut in pieces, hack
  6. to construct, as a mud wall by slapping on the mud # to sound # to beat upon, as wind, as waves, dash, as a mountain torrent


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறைதல்&oldid=1187672" இலிருந்து மீள்விக்கப்பட்டது