பொருள்

அவதாரம்(பெ)

  1. இறங்கி வருதல், கீழிறங்குதல்
  2. திருவிறக்கம், பிறப்பு, திவ்யப்பிறப்பு
  3. பிரிக்கை
  4. தீர்த்தத் துறை
  5. அபராதம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. descent
  2. incarnation, birth of a great or divine person, the assumption of a body by a deity
  3. tearing, dividing
  4. sacred ghat
  5. fine
  • பிரான்சியம்
  1. descente
  2. incarnation
விளக்கம்
பயன்பாடு
வைகாசி விசாகம் வரும்போதெல்லாம் நமது செய்தி ஏடுகளில் முருகனைப் பற்றிய கட்டுரைகள் வரும். வந்து கொண்டுள்ளன. விசாகம், முருகன் அவதாரம் செய்த நாள் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காட்சி ஊடகத்தில் முருகப் பெருமான், கிழவனாக அவதாரம் செய்து வள்ளியிடம் சென்றான் என்றும் சொன்னார்கள். கிழவனாக உருமாறியதையும் அவதாரம் என்றார்கள்.
வைணவ நெறியில் அவதாரம் உண்டு. பரம்பொருள் (பெருமாள்) பூமிக்கு இறங்கி வந்து மனிதனாகப் பிறப்பெடுப்பார். பிற உயிரினங்களாகப் பிறப்பெடுத்தலும் உண்டு. அவதாரம் எனில் "கீழே இறங்கி வருதல்" என்று பொருள். வானிலிருந்து தேவன் பூமிக்கு வருதலே அவதாரமாம்.
சைவசித்தாந்த நெறியில் அவதாரக் கொள்கையில்லை. பரம்பொருள் (சிவன்) மனித வடிவில் வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்; காட்சி தருவார்; மறைந்து போவார். சிவன் வேறு, முருகன் வேறல்லர்.
இராமபிரானைப்போல், கண்ணபிரானைப் போல் முருகப் பெருமான் உயிர் நீத்தமை (சிறப்பு) சொல்லப்படவில்லை. ஆதலின் முருகன் அவதாரம் செய்தார் என்றும் அவதார நட்சத்திரம் விசாகம் என்றும் ஆன்மிகப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் பேசாமலும் எழுதாமலும் இருத்தல் நல்லது. . (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், 04 செப் 2011)
  • மனித அவதாரம் - incarnation of a deity in human form
  • அவதாரமெடு - take incarnation as a human

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அவதாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

அவதாரமெடு - தசாவதாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவதாரம்&oldid=1989778" இலிருந்து மீள்விக்கப்பட்டது