தமிழ்

தொகு
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பிறப்பு, பெயர்ச்சொல்.
  • ஒரு மனிதனின் சனனம்/பிறப்பு
  1. சனனம்
    (எ. கா.) விழிப்பது போலும் பிறப்பு (குறள். 339). '
  2. உற்பத்தி
    (எ. கா.) பிறப்பி னாக்கம் வேறுவேறியல (தொல். எழுத். 83).
  3. சாதி
    (எ. கா.) இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள். 133).
  4. தொடக்கம்
    (எ. கா.) வருஷப்பிறப்பு, மாசப்பிறப்பு.
  5. உடன்பிறந்தவர் (W.)
  6. மகளிரணியும் முளைத்தாலி
    (எ. கா.) காசும் பிறப் புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7).
  7. வெண்பாவின் இறுதியில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு (காரிகை. செய். 5.) ((யாப்பு) )
  8. அச்சம் (பிங். )
  9. மயக்கம் (பிங். )
  10. நெருக்கம் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. birth,nativity
  2. origin, production
  3. order or class of beings including animals and vegetables,caste
  4. beginning, commencement, as of a month or a year
  5. brother or sister
  6. necklace of small seed-like gold pieces
  7. a formula of a foot of one nirai-y-acainēr-acaiu,occurring as the last foot of a veṇpā
  8. fear, alarm
  9. confusion, bewilderment
  10. closeness



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறப்பு&oldid=1988262" இலிருந்து மீள்விக்கப்பட்டது