தாலி
தாலி (திருமாங்கல்யக் கயிறு) எனப்படுவது மத்தியில் தெய்வீக பொன்னுரு பதக்கம் கோர்க்கப்பட்டு காணப்படும் மஞ்சள் பூசிய புனிதமான கயிற்றைக் குறிக்கும் சொல்லாகும். இதுவே திருமணத்திற்கும் அதன் பின்னுள்ள வாழ்க்கைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. மாங்கல்யதாரணம் எனப்படுவது திருமணத்தின் போது ஒருவர் குறித்ததொரு பெண்ணின் கழுத்தில் தாலி ஒன்றைக் கட்டி மூன்று முடிச்சுகள் இடுவதன் மூலம் அவளை தனது மனைவியாக்கிக் கொள்ளும் புனிதமான நிகழ்வை குறிக்கும்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தாலி(பெ)
- கணவன் மணந்ததற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு, மாங்கலியம்
- கீழாநெல்லி
- பனை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- central piece of a neck ornament solemnly tied by the bridegroom around the bride's neck as marriage-badge
- a small plant
விளக்கம்
பயன்பாடு
- தங்கத் தாலி(gold thali)
- என்னைத் தொட்டு தாலி கட்டினவர் (the person who tied the thali)
- மணமகன் மணப்பெண்ணின் கழுத்திலே தாலி கட்டுவதுதான் திருமணத்தின் முக்கிய நிகழ்வாக இருப்பதுடன் இருவரும் கணவன் மனைவியாக மாறுவதற்கு சாட்சியாகவும் இருக்கின்றது (The groom tying the thali around the bride's neck is the main ritual of the marriage and witnesses both of them becoming husband and wife)
(இலக்கியப் பயன்பாடு)
- சகுன மந்திரந் தாலி மணியெலாம் (பாரதியார்)
- தண்ணிய மலர்மே லண்ண றழன்முறை வளர்ப்பத் தாலி (பேரூர்ப் புராணம்)
- பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கில்கூட புலிகள் இருந்தது உண்டு. அப்போது காட்டுக்குள் தமிழ் இளைஞன் சென்று, புலியை வேட்டையாடிக் கொன்று, அதன் பல்லை மாலையாக அணிந்து (திரும்பி!) வந்தால்தான்... பெண் அவனுக்குத் தலை நீட்டுவாள். அந்தப் புலிப் பல் மாலையை அவளுக்கு தமிழன் அணிவிப்பான். அது தான் திருமணம். அதுவே பிற்பாடு தாலியாக மாறியது. (ஆனந்தவிகடன், 1 டிச 2010)
பனை ஓலையால்(தாலம் ) திரிக்கப் பட்ட கயிற்றில் மஞ்சள் சேர்த்து கட்டப்பட்டதால் தாலி எனப்படுகிறது. பிற்காலத்தில் மஞ்சளுக்குப் பதில் தங்கத்தால் ஆன திருமாங்கல்யம் பூட்டப்படுகிறது.
தாலம் - தாலி
{ஆதாரம்} --->