தலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் ஒன்று சேரும் இடம் அடங்கிய உறுப்பு.
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்
தொகு- தலைமை, தலைவன், தலைவி, தலைவர்
- தலைப்பு, தலையாய, தலைசிறந்த
- தலையாட்டி பொம்மை
- தலையெழுத்து, தலைமுறை, தலைவலி, தலைமுடி, தலைவிதி,
- தலைக்கனம், தலைக்கருவம்,
- தலைப்பிள்ளை, தலைச்சன், தலைச்சன் பிள்ளை,தலைப்பிரசவம்
- தலைக்கொள்ளி, தலைச்சீவுதல், தலைவாருதல், தலைவாசல், தலைவாயில்
- தலைச்சுழி, தலைச்சுற்று, தலைவாங்கல், தலைக் கொய்தல்,தலையங்கம், தலைப்பரட்டை,
- தலைச்சுருட்டை,தலைச்சுருளி, தலைச்சூடி, தலைமகன், தலைமகள், தலைக் குடிமகன்
- தலைக் குடிமகள், தலைமைச் செயலர், தலைமைச் செயலகம்,தலைமை அலுவலர்,தலைமை அலுவலகம், தலைமையகம்
- தலைச்சுமை,தலைக்கட்டு,தலைநிமிர்தல், தலையெடுத்தல், தலையீடு, தலையிடுதல்,தலைப்பின்னல்,
- தலையாரி, தலையிடி, தலைப்பாகை, தலைவிரிக் கோலம், தலைத் தீபாவளி, பெருந்தலை, தலைக்கவசம்
- தறுதலை, ஒருதலைக் காதல், தலைகொடு, தலைவாழையிலை, தலைமாடு, தலைமாட்டு.
- தலைக்கவசம், தலைநகரம், தலைநகர், தலை தூக்குதல்,
- தலைகீழ்
- உச்சந்தலை, அஞ்சல் தலை
- தலையணை
- சீத்தலைச்சாத்தனார்
- தலைவு - the head or beginning of a thread/string of yarn. தலவு என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது. (எ. கா.) தலவை ஊசியில் கோர்த்தாள்
விளக்கம்
- ஒரு காலத்தில் பருப்பொருளை உணர்த்திய சொற்கள் பிற்காலத்தில் நுண் பொருளை உணர்த்துமானால் அந்நிலை நுண்பொருட்பேறு ஆகும். "தலை" என்று ஓர் உறுப்பைத் தெரிவித்த அச்சொல், பிற்காலத்தில் "தலைமை" என்ற பொருளையும் - அதாவது நுண்பொருளையும் உணர்த்தியமை குறிக்கத்தக்கது. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற