தலைப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலைப்பு
- நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
@siசிவ#முன்றானை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- heading, title, as of a book
- front part of a woman's cloth
- end, edge or corner of a cloth
- beginning
- caption
விளக்கம்
பயன்பாடு
- நாளிதழில் இன்றய தலைப்புச் செய்திகள்
- செய்திகள் வாசிக்கும் போது முதலில் சொல்லுவது தலைப்புச் செய்திகளாகும்.
- என்னுடைய 'விகட’னில் வெளியான ராமாயணத் தொடருக்கு மதன்தான் வைத்தார் 'அவதார புருஷன்’ என்னும் தலைப்பை! புடவைகளுக்கு மட்டுமல்ல; புதினங்களுக்கும் தலைப்பு என்பது தலையாய விஷயம். புடவைத் தலைப்பு, வாங்க வைக்கும்; புதினத் தலைப்பு, வாசிக்கவைக்கும்! அப்படியோர் அசத்தலான தலைப்பு "சில நேரங்களில் சில மனிதர்கள்!" அடியேனுடைய ஐம்பதாண்டு கால நண்பர் திரு.ஜெயகாந்தன். அவரது இந்தத் தலைப்பு நேர்ப்படும் மனிதர்களின் நிஜங்களையும் நிழல்களையும் - நாம், நேரங்களுக்கேற்பவேதான், காண நேர்கிறது என்பதைப் பட்டாங்காய்ப் பறைசாற்றுகிறது! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 05-அக்டோபர் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தலைப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி