தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பட்டாங்கு, பெயர்ச்சொல்.
  1. உள்ள நிலைமை
  2. உண்மை
  3. சாத்திரம்
  4. பாசாங்கு; மெய்போற் பேசுங் கேலிப்பேச்சு முதலியன; படங்கு
  5. சித்திரவேலையமைந்த சீலை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. changeless, natural state
  2. truth
  3. scriptural text
  4. jest, farce, waggery; specious falsehood, sophistry
  5. printed cloth worn by women
விளக்கம்
பயன்பாடு
ஆசைக் கென்றோர் கறுப்பு
முடியேதும் இலையே;
அய்யய்யோ! கொக்கைப்போல்
நரைத்தது தலையே;
காசுக் குதவாத
கிழம் என்பது நிலையே;
கன்னியர்க்கும் இனிநாம்
கசக்கும் வேப் பிலையே!’
பாட்டில் இதனினும் பட்டாங்காகக் காட்ட முடியுமோ, விருத்தாப்பியத்தின் விளைவுகளை; விசனங்களை? (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 20-ஜூலை -2011)
(இலக்கியப் பயன்பாடு)
  • மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத்.156, உரை)
  • பட்டாங்கியானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36).
  • பட்டாங்கி லுள்ளபடி(மூதுரை).
  • பட்டாங்கடிப்பதற்கும் (ஆதியூரவதானி. 5).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : படாங்கு - படங்கு - பாசாங்கு - மெய்ம்மை - பட்டாங்குக்காரி - பட்டாங்குக்காரன்


( மொழிகள் )

சான்றுகள் ---பட்டாங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டாங்கு&oldid=1404972" இலிருந்து மீள்விக்கப்பட்டது