தறுதலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தறுதலை(பெ)
- அடங்காதவன், தறிதலை, பொறுப்பற்றவன், உதவாக்கரை, தண்டச்சோறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வீட்டில் எந்தப் பொறுப்புகளையும் ஏற்காமல், ஒரு வேலையும் செய்யாமல், வீட்டில் யாருக்கும் அடங்காமல், வீணாக ஊர் சுற்றிக்கொண்டு, அந்த வீட்டிற்கு ஒரு நீங்காத பாரமாக வேளாவேளைக்கு உணவு உண்டு, வீட்டிற்கு ஒரு பயனும் இல்லாமல், திரியும் ஒருவரை 'தறுதலை' என்று அழைப்பர்.
பயன்பாடு
- என்னுடைய தாத்தா ஒரு விடுதலை போராட்ட வீரர். "வெள்ளையனே வெளியேறு"போராட்டத்தில் இரண்டரை வருடம் சிறைத் தண்டனையும் பன்னிரண்டு கசையடிகளும் தண்டனையாகப் பெற்றிருக்கிறார். அந்த கால கட்டத்தில் இது போன்ற சிறைப் பறவைகளை தறுதலைகள் என்றுதான் தூற்றியிருப்பார்கள். (இன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தறுதலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +