உம்
பொருள்
உம் (இ)
- உம் என்னும் இடைச்சொல் 8 பொருளில் வரும்
- எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் - என்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 7)
பயன்பாடு
- இளங்கோவடிகளும் வந்தார்.- என்றால் இளங்கோவடிகள் அன்றி வந்த பிறரையும் உணர்த்தும். (எச்சம்)
- தேவரே தின்னினும் வேம்பு கசக்கும். (நாலடியார் 112)(சிறப்பு)
- பத்தானும் எட்டானும் தருக.(ஐயம்)
- கொற்றன் வருதற்கும் உரியன்.- என்றால் வராமைக்கும் உரியன் என்னும் பொருள் தரும்.(எதிர்மறை)
- மூவரும் வந்தனர்.- முற்றும்மை ஏற்கும் சொற்கள் பெரும்பாலும் தொகைச்சொல்லாக அமையும்.(முற்று)
- நிலனும் நீரும் தீயும் காற்றும் காயமும் கலந்த மயக்கம் உலகம்.(எண்)
- நன்றும் அன்று; தீதும் அன்று.- என்றால் இடைநிலைப்பட்டது எனத் தெளிவுபடுத்தியது ஆயிற்று.(தெரிநிலை)
- நெடியனும் வலியனும் ஆயினான். என்பது ஆக்கம்.(ஆக்கம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---உம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற