எழுவாய்
பொருள்
எழுவாய்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எழுவாய் = எழு + வாய்
- ஒரு சொற்றொடர் எழுவதற்கு வாய் (தொடக்கம்) போன்று அமைவதால் எழுவாய் எனப்பட்டது
- பெயரின் பொருளை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை. ஒரு சொற்றொடரில் முதலில் நிற்கும் எழுவாய் அதாவது பெயர் எந்தவித வேறுபாடும் அடையாது இயல்பாக அமைந்தால் முதல் வேற்றுமை எனப்படும்.
- எடுத்துக்காட்டு: முருகன் வந்தான். இதில் முருகன் எழுவாய் அல்லது முதல் வேற்றுமை ஆகும். இதனை எழுவாய்த்தொடர் என்றும் கூறுவர். (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- எழுவா யிறுவா யிலாதன (தேவா. 292, 5).
- எழுவாயுகத்தி லொருசிலம்பி (சீகாளத். பு. சீகாள. 1).
- எழுவாயுருபு திரிபில்பெயரே (நன். 295).
ஆதாரங்கள் ---எழுவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +