ஓரிலைத் தாமரை

தமிழ்

தொகு
 
ஓரிலைத் தாமரை:
--இலை
 
ஓரிலைத் தாமரை:
--பூ
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஓரிலைத் தாமரை, பெயர்ச்சொல்.
  • (ஓர்+இலை+தாமரை)

(Nervilia aragoana...(தாவரவியல் பெயர்))

  1. ஒரு வகை மூலிகைப் பூண்டு

விளக்கம்

தொகு
  • குணம்:- ஓரிலைத்தாமரை இலைகளை அரைத்துப் பசுவின் மோரில் கலக்கி பெண்கள் பருகினால் பால் சுரப்பு உண்டாகும்...கடுமையான மேகப் பிணிகள் போகும்...
  • சிறிய பூண்டு வகையைச் சேர்ந்த இந்த மூலிகை மலைச்சாரல்களிலுள்ள சதுப்பு நிலங்களில் செழிப்பாக வளரும்...உரூபாய் அகலத்தில் ஒரே ஒரு இலையைக்கொண்டதாகவும், இலையும்,,பூவும் தாமரையைப்போல இருப்பதாலும் ஓரிலைத் தாமரை என்னும் பெயரடைந்தது...இந்தக் கொடியின் இலைகளை அரைத்து சுமார் நெல்லிக்காய் அளவு பசுவின் மோரில் கலக்கி, தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் பிரசவித்தப் பெண்களுக்கு முலைப்பால் விருத்தியாகும்...மேலும் இந்தப் பயன்பட்டால் வெள்ளை, நீர் எரிச்சல், நீரடைப்பு ஆகிய மேக சம்பந்தமானப் பிணிகளும் நீங்கும்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. tall shield orchid
  2. a herbal weed


( மொழிகள் )

சான்றுகள் ---ஓரிலைத் தாமரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓரிலைத்_தாமரை&oldid=1286249" இலிருந்து மீள்விக்கப்பட்டது