கக்கரிக்காய்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கக்கரிக்காய், பெயர்ச்சொல்.
(Cucunis Sativus...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
தொகு- வெள்ளரிக்காயைப்போன்ற ஒரு காய்கறி வகை...நிறைய நீர்ச்சத்துள்ள ஒருவகைக் காய்...உணவாகக் கூட்டு அல்லது தயிர்ப்பச்சடி செய்துண்பர்...பச்சையாகவே உண்ணத் தகுந்த காய்கறிகளுள் ஒன்று.
- குணம்:-கக்கரிக்காய் பித்த தோஷம், மூலச்சூடு, இரத்தப்பித்தம் ஆகியவைகளை நீக்கும்...
- உபயோகிக்கும் முறை:-இந்தக் காயை மேற்தோல் சீவி சிறு துண்டுகளாக்கி மிளகு, உப்புத்தூள் பொடிகளில் சிறிது துவட்டிச் சாப்பிட நாவிற்கு மிகச்சுவையாக யிருக்கும்...இன்னும் வெய்யிலின் கடுமையால் உண்டான தாகம் அடங்கும்...வயிற்றிலுண்டான கொதிப்பு மற்றும் பித்த சூடு, உஷ்ண சுரம் ஆகியப்பிணிகளை அமைதிப்படுத்தி, சிறு நீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்தும்...இந்தக்காய் விரைவில் செரிமானம் ஆகாதாகையால் மிளகையும், உப்பையும் சேர்த்தே சாப்பிடவேண்டும்...கக்கரிக்காய் விதைகளை கியாழங்களில் சேர்த்துப் பயன்படுத்தினால் சிறுநீர் தாராளமாகப் போகும்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கக்கரிக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி