கரம்(பெ)

ஆணின் வலது கரம்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஆதாரம்

தொகு
  'கரமலர் மொட்டித்து'(திருவாச.4.84).
  • கரு --> கரம்
  • கரு = செய். [ஒநோ: கருவாளி = உழைப்பாளி]. இச்சொல் உலகமொழிகளில் ஊடாடியுள்ளது. கருத்தல் = செய்தல். கரு கரம். கரம் = செய்தற்குரியது, செய்தற்கு உதவியாக இருக்கும் கை. ஒளிக்கற்றை கதிரவனின் கையாகக் கருதப்பட்டமை நோக்கி"கரம்' எனப்பட்டது.
  • வடமொழியார் கரம், காரம் என்னும் இரண்டையே தமிழினின்று கொண்டுள்ளனர். அதோடு குறிற்கு இரண்டையும் வேறுபாடின்றி ஆள்வர். இதனாற் சாரியையமைப்பின் தமிழ் மூலம், தெளிவாகத் தெரிகின்றது. கரம், காரம் என்பன வடமொழியில் கர, கார என்று ஈறுகெட்டு நிற்கும். சாரியை என்னுங் குறியீடும் வடமொழியிலில்லை (வ.மொ.வ.299);.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- hand
  • எசுப்பானியம் - brazo


சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  • இரு கரம் கூப்பி வணங்குகிறேன் (I salute you with both my hands)
  • சிரம் கரம் புறம் நீட்டாதீர் (don't stick your head or hands out)
  • கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன்.
நேசக்கரம் - நேசம் + கரம். நேசக்கரம் நீட்டு. Extend the hand of friendship
கரம்
கரம், கரங்கொடு, கரங்கோர், கரங்கூப்பு
அகரம், இகரம், உகரம், எகரம், ஒகரம், ககரம், ஙகரம், சகரம்
துணிகரம், வெற்றிகரம், பயங்கரம், உதவிகரம், மங்களகரம், கபளீகரம்
திருக்கரம், பொற்கரம், ஆதரவுக்கரம், உதவிக்கரம்
நாற்கரம், இணைகரம், ஐங்கரம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரம்&oldid=1904363" இலிருந்து மீள்விக்கப்பட்டது