கர்ண (कर्ण) மற்றும் கரண (करण) ஆகிய இரண்டு சமஸ்கிருதச் சொற்கள் ஒரே தமிழ்ச் சொல்லாக கர்ணம் என பயன்படுத்தப்பட்டது...முதற் சொல்லிற்குக் காது எனவும் இரண்டாம் சொல்லுக்கு கிராம கணக்கன் என்றும் பொருளாகியது...சமஸ்கிருதத்தில் கரண (करण) என்னும் சொல்லுக்குரிய பற்பல அர்த்தங்களில் உதவியாளன், தோழன் எனும் பொருட்களும் அடங்கும்...ஒரு கிராமத்தின் அனைத்துக் கணக்கு விவகாரங்களையும், ஆவணப்படுத்தி நிருவாகம் செய்யும் ஒருவரை, முதலில் கிராம உதவியாளன் எனும் அர்த்தத்தில் கிராம கர்ணம் என்றே அழைக்கப்பட்டு, பின்னர் கணக்கு வழக்குகளை பார்ப்பதால், இச்சொல் கிராம கணக்கனாகி, பிறகு சுருங்கி கர்ணம் ஆனது...கிராமக்கணக்குவேலையையும் இந்தச் சொல்லால் குறிப்பிட்டனர்...