கலந்தசாதம்

தமிழ்

தொகு
 
கலந்தசாதம்:
புளியோரை
 
கலந்தசாதம்:
தயிர் சாதம்
 
கலந்தசாதம்:
எலுமிச்சை சாதம்
(கோப்பு)

பொருள்

தொகு
  • கலந்தசாதம், பெயர்ச்சொல்.
  1. சித்திரான்னம்
  2. மாற்று சாத வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. cooked rice mixed with different/various flavours,/ingredients,

விளக்கம்

தொகு
  • அரிசிச் சாதத்தைப் பலவித சுவையிலும்/மணத்திலும் மாற்றித் தயாரித்த உணவுகளுக்கு கலந்தசாதம் என்பர்...வேறு பற்பல பொருட்களோடு சாதத்தைக் கலந்து தயாரிப்பதால் கலந்தசாதம் என்றாகிறது...இவைகளை சித்திரான்னங்கள் என்றும் கூறுவர்...சம்பிரதாயமாக புளியோரை, எள்ளோரை, மிளகோரை, எலுமிச்சை சாதம், புளிச்சாதம் என்னும் புளியஞ்சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், தத்தியோன்னம் என்னும் தயிர்ச் சாதம், கதம்ப சாதம் என்பனவையே கலந்தசாதங்கள் ஆகும்...தற்காலத்தில் மேலும் பல கலந்தசாதங்கள், தக்காளி சாதம் (பாத்), கீரை சாதம், பிசிபேளா பாத், வங்கி பாத் என்பதாக சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன...பிரியாணி வகைகள் கலந்தசாதம் எனும் பகுப்பில் வராது...அவை ஒரு தனிச் சமையல் முறைக்குட்பட்டவை...



( மொழிகள் )

சான்றுகோள் ---[1],[2]-கலந்தசாதம் என்னும் சொல் நடைமுறையிலுள்ளது என்பதைக்காட்டுவதற்கு]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலந்தசாதம்&oldid=1447288" இலிருந்து மீள்விக்கப்பட்டது