பொருள்

காந்து(வி)

  1. எரிவெடு. கைப் புண் காந்துகின்றது
  2. வெப்பங்கொள்
  3. கருகு சோறு காந்திப் போயிற்று
  4. மனங்கொதி. புத்திபோய்க் காந்து கின்றது (கம்பரா. சடாயுகா. 37)
  5. பிரகாசி பரம்பிற்காந்து மினமணி (கம்பரா. நாட்டுப். 7)
  6. பொறாமை கொள். அவளைக்கண்டு காந்துகிறாள்.
  7. வீணாய் எரி
  8. கோபி காந்தி மலைக்குத்து மால்யானை (வள்ளுவமா. 11)
  9. சுட வை; சுடு
  10. காய்ந்த மண், சூடான பாத்திரம் முதலியன போல நீர், மழை முதலியவற்றைச் சுவறச்செய்
  11. தேங்காய் முதலியவற்றைப் பல்லினாற் கறுவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. burn, smart, as a sore
  2. feel burning sensation in the body
  3. be scorched, charred, reduced to cinder
  4. be hot with indignation
  5. shine, give out lustre, emit rays
  6. burn with envy
  7. burn without use, as oven
  8. be angry with
  9. heat
  10. absorb, exhaust by evaporation, as water, rain
  11. bite off, scrape out with the teeth, as a coconut
பயன்பாடு
  • ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள். ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை. "அரப்புக் காந்தும்; நான் மாட்டேன்." என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா. ( ராஜா வந்திருக்கிறார், கு. அழகிரிசாமி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :எரி - கருகு - சுடு - கோபி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்து&oldid=1242478" இலிருந்து மீள்விக்கப்பட்டது