குந்து
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
குந்து(வி)
- இருகாலையும் ஊன்றவைத்து உட்கார்
- உட்கார்
- கந்தப்பு பலகையை இழுத்துப்போட்டுக் குந்தினார். (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
- முன்னங்கால்களைமட்டும் ஊன்றி நில்
- குந்தி யுறித்தயி ருண்டவர் (பாரத. கிருட். 199)
- நொண்டி நட
- அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் (கம்பரா. கும்பக.348)
- வளை
- குந்துவன்னெடுஞ் சிலைமுதற் படைகளும் (கம்பரா. பிரமாத்.56)
- தவறு
- குந்தாவருந் தீமை (திவ்.திருவாய். 2, 6, 1)
(பெ)
- உட்காருதல்
- திண்ணையொட்டு
- அரைச் சாக்கு நெல்லு காயப்போடக்கூடிய அளவிற்கு ஒரு குந்து. அதை ஒட்டியபடி கிடக்கும் மண்சுவரில் கரிக்கணக்கு எழுதாத இடமாகப் பார்த்து, ஒரு தேதியில்லாத முருகன் காலண்டர் பரிதாபமாகத் தொங்குகிறது. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
- கிணற்றடியில் கால் கையைக் கழுவிப்போட்டுக் குந்திலே சாய்ந்தார். (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
- நொண்டுகை
- பழத்தின் சிம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்(வி)
- sit on the heels with legs folded upright
- sit, squat
- stand on tiptoe
- hop on one leg
- bend, as a bow
- fail, miss
(பெ)
- sitting on the heels, squatting
- pial or raised floor of a verandah used as a seat
- hopping
- fibre in fruits or roots
பயன்பாடு
- குந்துகாலன், குந்துகாலி - a hobbling or limping person
- குந்துதிண்ணை - a narrow pial or elevated floor of a verandah used as a seat - ஒட்டுத்திண்ணை.
- குந்துகாலிலே நில் - stand on tip-toe; wait anxiously; be in haste
- குந்துத்தடி - stick with several prongs, or a similar contrivance to take out the fibre from palmyra pulp
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +