கொக்கிக்குழல்

தற்காலத்தில் கொக்கிக்குழால் சுட்டுக் காட்டும் ஒரு தாத்தா

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கொக்கிக்குழல், பெயர்ச்சொல்.
  1. இது 15 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த வாய்வழியாக தாணிக்கப்படும் சுடுகலன் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. arquebus

விளக்கம்

தொகு
 கொக்கி + குழல் = கொக்கிக்குழல் 
  • கொக்கியின் மேலிருக்கும்/வைக்கப்பட்டிருக்கும் குழல் என்பதே இச்சொல்லின் பொருளாகும்.

இதை சரியாக நிலைப்படுத்தி இலக்கு வைப்பதற்காக கொக்கி போன்ற வடிவம் உடையதைத் தலையாகவும் அதைத் தாங்குவதற்கு ஒரு தடியையும் உடைய ஒரு ஏந்தனத்திலும் நிற்கப்பட்டிருக்கும். இதன் அடிப்படையிலேதான் இச்சுடுகலனிற்கு கொக்கிக்குழல் என வழங்கப்படுகிறது, அனைத்து மொழிகளிலும். அப்படியேதான் தமிழிலும் வழங்கப் படுகிறது;படவேண்டும்.

இங்கு குழல் என விகுதி அமைவதற்குக் காரணம் பண்டைய காலங்களில் வந்த blunderbuss என்பதை அன்றைய தமிழர்கள் தமிழில் குண்டுக்குழல்/குண்டுக்குழாய் என்று மொழி பெயர்த்திருந்தனர். அதே போல ஒரு சில இலக்கியங்களில்(19 நூற்றாண்டு) குழல் என்பது சுடுகலனையும் குறித்திருக்கிறது. ஆகையால் அதே பண்டைய காலத்தில் வந்த harquebus என்பதிற்கும் குழல் என்னுஞ்சொல்லையே விகுதியாக்குவது வரலாற்றைத் தக்க வைப்பதாகும்.

மாறாக தற்காலத்திற்கு ஏற்ப பாவாணரால் முன்வழங்கப்பட்டு ஈழ நிழலரசால் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட ரைபிளைக் குறித்த துமுக்கி என்னுஞ்சொல்லை இங்கு விகுதியாக்கக் கூடாது. அது மொழிச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்பதை தமிழ்மொழி வல்லுநர் அல்லாதோர் அறியவும்.

பயன்பாடு

தொகு
  • என்னுடைய தாத்தா ஒல்லாந்தரை கொக்கிக்குழால் சுட்டுக் கொன்றார்

சொல்வளம்

தொகு
தெறாடி - குண்டுக்குழல் - குறுதெறாடி - தெறுவேயம் - குறுதுமுக்கி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொக்கிக்குழல்&oldid=1903469" இலிருந்து மீள்விக்கப்பட்டது