கோடாலிக்காம்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கோடாலிக்காம்பு(பெ)
- கோடரிக்காம்பு; கோடாலியின் மரப்பிடி
- தன்குலத்தையே அழிப்பவன்; இனத் துரோகி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு - பழமொழி
- குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்பு போல - பழமொழி
- ஊழல் செய்த அலுவலரைப் பணியிடைநீக்கம் செய்தால் அல்லது துறைநடவடிக்கை மேற்கொண்டால்கூட, மாநில அளவில் வேலைநிறுத்தம் செய்து ஸ்தம்பிக்க வைக்கும் அலுவலர் சங்கங்கள், இத்தகைய நேர்மையான அதிகாரிகள் கொல்லப்பட்டால், ஒரு கோடாலிக்காம்பு முறிந்தது என்று மனதுக்குள் மகிழ்ச்சியுடன், வெளியில் பொய்யான வெற்று அறிக்கைகளுடன் பிரச்னையை மறக்கடிக்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. (சத்தியத்துக்கு சோதனை!, தினமணி தலையங்கம், 22 மே 2012)
(இலக்கியப் பயன்பாடு)
- கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக் கேடான கொள்கை தானே (தண்டலையார் சதகம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---கோடாலிக்காம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +