சமயோசிதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சமயோசிதம்(பெ)
- சமயத்துக்குப் பொருத்தம்; நேரத்திற்கு ஏற்றது.
- உடனுக்குடன் ஒன்றை யோசித்து செய்வது; அல்லது சொல்வது; புத்திசாலித்தனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- suitability to occasion
- quick-wittedness
விளக்கம்
பயன்பாடு
- சமயோசிதம் என்றால் உடனுக்குடன் ஒன்றை யோசித்து செய்வது; அல்லது சொல்வது. வின்ஸ்டன் சேர்ச்சில் அதில் கெட்டிக்காரர் என்று சொல்வார்கள். அவருடைய புகழ் உச்சத்தில் இருந்த சமயம் ஒரு பெண் அவரிடம் வந்து 'வின்ஸ்டன், உங்களிடம் எனக்கு பிடிக்காதது இரண்டு விசயம்தான். உங்களுடைய மீசை; மற்றது உங்கள் அரசியல்' என்றார். அதற்கு சேர்ச்சில் 'அம்மணி, விசனம் வேண்டாம். இரண்டுக்கும் அருகாமையில் வரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை' என்றார்.(சமயோசிதம், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சமயோசிதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி