பொருள்

உசிதம், பெயர்ச்சொல்.

  1. பொருத்தம்
  2. உகந்த
  3. தகுதி
  4. மேன்மை
  5. சிறப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. apt, fit, suitability, excellence, appropriateness ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • அறிஞர் அருணாசலம் நமது பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு தலைமை ஏற்பது உசிதமாய்(சிறப்பு) இருக்கும்.
  • அந்த பதவி ருக்மணி அம்மா அவர்களால் உசிதமானது.(மேன்மை)
  • எனக்கென்னமோ அந்த பையனுக்கு இந்த பெண் உசிதமானவள்.(தகுதி)
பயன்பாடு
  • ."..அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது. ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்.." (கல்கி, பொன்னியின் செல்வன்)
  • இரவு பகலாக தொடர்ந்து வாசித்தேன். அதுதான் காரணமோ என்னவோ என் இடது கண்ணில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. கண் சிவப்பாகியது. நீர் வடிந்தது.. குடும்ப வைத்தியரிடம் போனேன். வரவேற்பாளினியிடம் என் கண் விருத்தாந்தத்தைக் கூறி மருத்துவரை பார்க்கமுடியுமா? என வினவினேன். அவர் மறுத்து கண் மருத்துவரைப் பார்ப்பதுதான் உசிதம் என அபிப்பிராயம் சொன்னார். (நான் உதவமுடியாது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :பொருத்தம் - உத்தமம் - உச்சிதம் - தகுதி - ஔசித்யம் - சமயோசிதம்


( மொழிகள் )

சான்றுகள் ---உசிதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உசிதம்&oldid=1972891" இலிருந்து மீள்விக்கப்பட்டது