சவலைப் பிள்ளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சவலைப் பிள்ளை, .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- சவலை, சவலைப்பிள்ளை அல்லது சவலை பாய்தல் என்னும் சொற்றொடர்கள் நாட்டுப்புற வாழ்வியலில் வழங்கப்படுபவை ஆகும். ஒரு குழந்தை தனது தாயிடத்திலிருந்து பால் குடிக்கும் வழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அல்லது அதீதப் பாசப்பிணைப்பிலிருந்து விடுபடுவதற்கு முன்பாக, அத்தாய் அடுத்த குழந்தையைப் பெற்றெடுக்கத் தயார் நிலையை எய்துகிறபோது, அம்மூத்த குழந்தையின் செயல்பாடுகள் உடல் வளர்ச்சி முதலியவற்றில் ஒருவித மந்தத்தன்மை தோன்றும். இதனால் அக்குழந்தை அதன் உணவு, விளையாட்டு முதலான இயற்கையான செயல்பாடுகளை மறுத்து உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு உடல் வளர்ச்சியிலும் ஒரு தேக்கத்தைக் காட்டுகிறது. மூத்த குழந்தையின் இத்தன்மையைச் சவலை பாய்தல் என்றும் அக்குழந்தையைச் சவலை அல்லது சவலைப் பிள்ளை என்றும் அழைக்கின்றனர் (சவலை, ச.பிலவேந்திரன்)
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம். தாயின் களைத்த தேகம் குழந்தையைப் போஷிக்கச் சக்தியற்று விட்டது. (பால்வண்ணம் பிள்ளை, புதுமைப்பித்தன்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சவலைப் பிள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற