பிள்ளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பிள்ளை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- அஃறிணையைக் குறிக்கும் சொல் பின்பு உயர்திணைக்கு வழங்கப்படுமானால், அது உயர்பொருட்பேறு எனப்படும். கீரிப்பிள்ளை, அணிப்பிள்ளை என்பன அஃறிணை இனங்கட்குச் சிறப்பாகப் பேசப்பட்டுப் பின், "பிள்ளை" என்ற சொல் உயர்திணையான "குழந்தை"யையும் உணர்த்த நின்றது. இதே பெயர் மக்களின் ஜாதிப் பெயரையும் குறித்தமை சிந்திக்கத்தக்கது. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
பயன்பாடு
- பெண் பிள்ளை, கீரிப் பிள்ளை, கிளிப் பிள்ளை, தென்னம் பிள்ளை
- பிள்ளைப் பட்டம் மரங்களில் தென்னைக்கு எனில், பறவைகளில் கிளிக்கு, பிராணிகளில் அணிலுக்கும் கீரிக்கும். (கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்!, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் (பழமொழி)
{ஆதாரம்} --->